சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கு ஜனவரி மாதம் 27ஆம் திகதி

82

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கு ஜனவரி மாதம் 27ஆம் திகதி எடுத்துக் கொள்ளுமாறு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று (13.01.2021) உத்தரவிட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை (11) சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவரை மேலும் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சுமார் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்பட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.