உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாரிகளின் மனைவிமார்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

116

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட மொஹமட் முபாரக் எனும் சந்தேகநபரின் மனைவியான ஆயிஷா சித்திகா உள்ளிட்ட 12 பேருக்கு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே நேற்று (13) இவ்வுத்தரவை வழங்கினார்.

ஸஹ்ரானின் மனைவி அப்துல் ஹமீத் பாத்திமா ஹாதியா, அசாருதீன் மொஹமட் ஹில்மி, அப்துல் ஹமீத் முகமது ரிபாஸ், மொஹமட் மஷ்னுக் மொஹமட் றிழா, மொஹமட் அமீர் எம் ஹயாத்துல்லா, மொஹமட் முபாரக் முகமது ரிபாயில் உள்ளிட்டவர்களும், கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட மொஹமட் வசீம் உள்ளிட்ட 12 பேருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.