நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக நிவாட் கப்ரால் உண்மையைக் கூறாவிட்டாலும் உதய கம்மன்பில உண்மையைக் கூறியுள்ளார்

53

– பா.உ. ஹர்ச டி சில்வா

நிதி இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான உண்மைத் தன்மையை பாராளுமன்றத்தில் கூறாவிட் டாலும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில அவர்கள் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான உண்மையான நிலைமையைக் கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

அமைச்சர் உதய கம்மன்பில் அவர்கள் எமக்கு கடன் வழங்கிய நாடுகள், நிறுவனங்கள்

மற்றும் முதளீட்டாளர்களிடம் இவ்வருடம் எமக்கு கடனை மீளச் செலுத்துவதில் சிரமம் உள்ளதாகவும் அதனை ஒரு வருடத்திற்கு பிற்படுத்தி தரும் படியும் அமைச்சரைவை முடிவு  களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேட்டுக்கொண்டிருந்தார்.

தற்போது இரண்டாம் நிலைச் சந்தையில் இலங்கையில் மத்தியவங்கி பிணை முறிகளுக்கான வட்டி 31 வீதம் வரை செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையின் கடன் மீளச் செலுத்துவதற்கான நம்பிக்கையும் சந்தையில் குறைந்துள்ளது. இவை காரணமாக இவ்வாறான சலுகைகளை கடன் வழங்கியவர்களிடமிருந்து எம்மால் எதிர்பார்க்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.