அமெரிக்க காங்கிரஸ் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அவரை பதவி நீக்குவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்படி பதவி நீக்கப்படும் பட்சத்தில் ட்ரம்ப் பின்வரும் சலுகைகளை இழக்க வேண்டியேற்படும்.
1- முன்னாள் ஜனாதிபதிக்கென வாழ்நாள் பூராகவும் வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவை ட்ரம்ப் இழப்பார். வருடாந்தம் சுமார் 200,000 அமெரிக்க டொலர்களை விட அதிகமான தொகை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அது இலங்கை பெறுமதியில் சுமார் 38,504,000.00 ரூபாய்களாகும்.
2- முன்னாள் ஜனாதிபதியின் பயணச் செலவுகளுக்காக ஒதுக்கப்படும் வருடாந்த தொகையான ஒரு மில்லியன் டொலர்ககளை இழப்பார். இலங்கையின் பெறுமதியில் அது 192,250,000.00 ரூபாய்களாகும்.
3- முன்னாள் ஜனாதிபதிக்கு வாழ்நாள் பூராக வழங்கப்படும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பு கிடைக்காது.
4- நியமனத்தின் அடிப்படையிலோ அல்லது தெரிவின் அடிப்படையிலோ அரச பதவிகள் எதனையும் அவரால் வகிக்க தடைவிதிக்கப்படும்.
5- எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் அவரால் போட்டியிட முடியாது.