கொரோனா இன்னும் சமூகப்பரவலாக மாறவில்லை

81

நாட்டின் பல பாகங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என தொற்றுநோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார்.

நாடு ஏற்கனவே சமூகப் பரவல் கட்;டத்தை கடந்த விட்டதாகவும், கட்டுப்படுத்தாத நிலைமைக்கு சென்று விட்டதாகவும் சிலர் வலிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மிக அண்மைக்காலம் வரை கொரோனா நோயாளர்கள் மேற்கு மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டு வந்தனர். இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

கொரோனா தொற்றுக்கள் பரவும் மூலங்களை கண்டடையாத நிலைமை ஏற்பட்டாலே அது சமூகப்;பரவலாக அடையாளப்படத்தப்படும். தற்போது நாட்டில் சமூகப் பரவல் ஏற்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொற்றுக்கள் பதிவாகின்றன. இருந்தாலும் அது சமூகப் பரவல் என்ற அரத்தமல்ல என அவர் வலியுறுத்தினார்.

தற்போது தினமும் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறதளவு குறைவு ஏற்பட்டிருந்தாலும் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன் தேவையற்ற பயணங்களை முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக தினமும் 60 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். சில இடங்களில் அவற்றைத் தடுக்க முயன்ற சம்பங்களும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.