உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை மார்ச்சில்

81

புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை தடுக்கமுடியாது போனமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும்  எதிர்வரும் மார்ச் மாதம் 8,9,10ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழாம்நேற்று தீர்மானித்துள்ளது.

இம் மனுக்களுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு படைகளின் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி பியல் தி சில்வா ஆகிய இருவருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் இருந்தால் மனுதாரர்கள் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.