கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மாகாண சபை தேர்தல்

77

கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படுமென சமுர்த்தி, நுண்கடன் மற்றும் அரச தொழில் வழங்கல் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபைமுறைமையை முழுமையாக செயற்படுத்த முடியாது.

மாகாண சபை முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டின் அரச கட்டமைப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளது. முரண்பாடற்ற வகையிலான விடயங்கள் மாத்திரம் மாகாண சபை முறைமையில் ஜனாதிபதியாகவிருந்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படுத்தினார்.