கிழக்கு மாகாணத்தில் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

99

கல்முனை தெற்கு, காத்தான்குடி, அம்பாறை, கிண்ணியா, காரைதீவு, ஓட்டமாவடி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஒரு வார காலத்திற்குள் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.

கடந்த 12 மணித்தியாலத்திற்குள்  47 பேர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை  கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.