வாட்சாப் நிறுவனம் முடிவை மாற்றிக் கொண்டது

152

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சாப் அமுல்படுத்தப்படுத்தவிருந்த புதிய பிரைவஸி கொள்கையை பிற்போட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பயனாளர்களின் தகவல் விபரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாட்சாப் மேற்கொள்ளவிருந்த புதிய பிரைவஸி கொள்கை காரணமாக அதன் பயனாளர்களில் பலர் வேறு அப்லிகேஷன்களை தரவிறக்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயனாளர்கள் இதன் பிறகு புதிய பிரைவஸி கொள்கையை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள் என வாட்சாப் அறிவித்துள்ளது.

பெப்ரவரியில் மேற்கொள்ளவிருந்து புதிய பிரைவஸி கொள்கையை எதிர்வரும் மே மாதம் வரை பிற்போட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.