100 நூற்றாண்டு விழா: கொழும்புப் பல்கலைக்கழகம்

151

கலாநிதி பரீனா ருஸைக்
சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை கொழும்புப் பல்கலைக்கழகம்

உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமான ஒன்றா கத் திகழ்கின்றன. அந்தவகையில் இலங்கையில் உயர்கல்வியை வழங்கிவரும் கொழும்பு பல் கலைக்கழகம் இலங்கையின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். கொழும்பு பல்கலைக்கழ கம் இலங்கையில் காணப்படும் பல்கலைக்கழ கங்களுள் மிகப் பெரிய பல்கலைக் கழகமாகக் காணப்படுவதோடு, நவீன உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் முதன்மை கல்வியகமாகத் திகழ்கின்றமையும் குறிப்பிடத் தக்கது.

பிரித்தானிய காலணியின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து 1921ஆம் ஆண்டு இலங்கையில் ‘பல்கலைக்கழகக் கல்லூரி’ எனும் பெயரில் கொழும்புப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னமே 1870 ஆம் ஆண்டில் இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டையே இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக ஆண்டாக அல்லது தோற்ற ஆண்டாகக் கருதுவது பொருத்தமானதாக அமையும். 1923 ஆம் ஆண்டிலிருந்து இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

1870 இல் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் பாடசாலை தென்னாசியப் பிராந்தியத்தில் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் பாடசா லையாக விளங்கியது. 1880 களில் இம்மருத் துவப் பாடசாலை, மருத்துவக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. இம்மருத்துவக் கல்லூரி யில் கல்வி கற்றமாணவர்களுக்கு, 1889 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத் துவச் சபையினால் பிரித்தானியாவில் மருத்து வப் பயிற்சியைப் பெறுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளைச் சட்ட இலக்கம் 20 இன் பிரகாரம் இலங்கைப் பல்கலைக் கழகமாக உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில்  1942 இல் விஞ்ஞானப் பீடமும், 1947 இல்   சட்டப் பீடமும், 1949 இல் கல்விப் பீடமும் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு கலைப் பீடமும் ஆரம்பிக் கப்பட்டது.

1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலி ருந்து அரசாணைக்கேற்ப கொழும்பு இலங் கைப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் தனித்து இயங்க ஆரம்பித்தது. 5000 மாணவர் களையும், 300 ஆளணியினரையும் கொண்டு கலை, சட்டம், விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் என்பவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக இது உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். 1972 இல் இலங்கையில் பேராதனை இலங் கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யோதயா இலங்கைப்  பல்கலைக்கழகம் மற்றும் வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் எனும் 4 நான்கு வளாகங்கள் காணப்பட்டன. கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் கட்டுபொத்த தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து செயற்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் தலைமையகமாக  ‘செனட் இல்லம்’ எனும் பெயரில் இன்றைய ‘கல்லூரி இல்லம்’ காணப்படுகின்றது. இத்திட் டம் வெற்றியளிக்காமையினால் 1998 இல் இவை மீண்டும் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கின.

1980 ஆம் ஆண்டுகளில் கொழும்புப் பல்கலைக்கழகம் எனும் நாமத்தில் மருத்துவம், கலை, விஞ்ஞானம் மற்றும் சட்டம் ஆகிய பீடங்களுடன் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட முகாமைத்துவ நிதிப் பீடமும் இணைந்து செயற்பட்டு வந்தது. 1978 இல் பல்கலைக் கழகச் சட்ட இலக்கம் 16 கீழ் இலங்கைப் பல் கலைக்கழகம் 6 தனிச் சுதந்திரப் பல்கலைக்கழ கங்களாக உருவெடுத்தது. கொழும்புப் பல் கலைக்கழகத்தில் 1987 இல் பட்டதாரி கற்கை கள் பீடமும் உருவாக்கப்பட்டது. 1996 இல் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீபாளி வளாகம் உருவாக்கப்பட்டது. 1997 இல் மருத்துவ முதுமாணி கல்வியகமும், சுதேசிய மருத்துவ நிர்வாகமும், கொழும்புப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன. 1987 இலேயே உருவாக்கப்பட்ட கணினித் தொழில் நுட்பக் கல்வியகம் 2002 ஆம் ஆண்டு கணினிப் பாடசாலையாக மாற்றியமைக்கப் பட்டது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டில் தாதியர் சேவைப் பீடம் மற்றும் தொழில் நுட்பப் பீடம் ஆகிய இரு புதிய பீடங் கள் உருவாக்கப்பட்டன.  இப்பல்கலைக்கழகத் தின் மகுடவாசகம் சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டதாகும். அது ‘அறிவு எங்கும் விளங்குக’ எனும் பொருளைக் கொண்ட ‘புத்தி ஸர்வதபிரதே’ என்ற வாசகத்தைக் குறிக்கோளா கக் கொண்டு செயற்படுகின்றது.

இப்பல்கலைக்கழகம் 11 பீடங்களையும், 41 துறைகளையும் மற்றும் 8 வேறு நிறுவனங்களை யும் கொண்டு இயங்குகின்றது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் தொடர்பாக நோக்கின், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாக மையங்களும் அனைத்துப் பீடங் களும் ஒரே இடத்தில் அமையப் பெறவில்லை. மாறாக வெவ்வேறுபகுதிகளில் அமையப் பெற் றுள்ளன. கொழும்பில் மிக முக்கியமையமாகக் கருதப்பட்ட தும்முல்லைப் பகுதியில் இதன் நிர்வாகப் பகுதி மற்றும் பெரும்பாலான பீடங்கள் அமையப் பெற்றுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் “கல்லூரி இல்லம்” (கொலஜ் ஹவுஸ்) எனும் நிர்வாகக் காரியாலயத்தில் இடம்பெறுகின்றன. விஞ்ஞானப் பீடம் மற்றும் கணினிக் கல்லூரி என்பன பிலிப் குணவர்தன மாவத்தைக்கு வலப்புறத்திலும் சட் டம், மற்றும் கலை ஆகியப் பீடங்கள் இடப்புற மாகவும் அமையப் பெற்றுள்ளன. அதே வளாகத் தில் பௌத்தாலோக்கா மாவத்தையில் முகாமைத் துவ நிதிப் பீடம் மற்றும் கல்விப் பீடம் ஆகியன அமையப் பெற்றுள்ளன. பொரளையில் அமை யப் பெற்றுள்ள வைத்தியசாலை சதுக்கத்தில் இப்பல்கலைக்கழகத்தில் மிகப் பழமையான மருத்துவப் பீடம் அமைந்துள்ளது. சுதேசிய வைத்திய நிர்வாகம் மற்றும் ஸ்ரீபாளி வளாகம் என்பன முறையே நாவல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் தொடர்பாக நோக்கின், பல்கலைக்கழக மானியங் கள் ஆணைக்குழுவால் இப்பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கத்தின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் நிதி வழங்கப்படுகின்றது. முற்றிலும் இலவசமாக இளமாணி பட்டப் படிப்பை வழங்குகின்றது. இப்பல்கலைக்கழகத் தின் வேந்தர் மற்றும் உபவேந்தர் ஆகியோர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். வேந்தர் பெரும்பாலும் நிர்வாகப் பொறுப்பு களை மேற்கொள்ளாவிடினும், பட்டமளிப்பின் போது அவையைத் தலைமைத் தாங்குகின்றார். துணை வேந்தர் பல்கலைக்கழக முகாமையாள ராக விளங்குகின்றார். கொழும்புப் பல்கலைக்கழ கத்தின் முதல் துணை வேந்தரான ரொபர்ட் மார்ஸ் (Robert Marrs) என்பவர் 1922 தொடக்கம் 1939 வரை பதவி வகித்தார்;.

கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கான பிரதான நூலகம் கலைப்பீட வளாகத்தில் இயங்குகின்றது. இந்நூலகத்தின் இரு கிளைகள் விஞ்ஞான மற்றும் மருத்துவ பீடங்களில் இயங்குகின்றன. மருத்து வப் பீட நூலகம் 1870 இல் நிறுவப்பட்டது. 4 லட்சத்திற்கு மேலான நூல்கள் காணப்படுகின்றன. பல அரிய தொகுப்புகளும், இலங்கை தொகுப்பு கள் எனும் தலைப்புகளின் கீழ் ஓலைச் சுவடிக ளும் பிரதான நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

இன்று 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 11604 மாண வர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுள் 9100 பேர் இளமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர் களாகவும், 2504 பேர் முதுமாணிபட்டப் படிப் பைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அதேவேளை இப்பல்கலைக்கழகத்தில் கல்விசார் ஊழியர்கள் 240 பேரும், கல்விசாரா ஊழியர்கள் 1600 பேரும் பணிபுரிகின்றனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இன்றைய (2020) வேந்த ராக மதிப்பிற்கும் மரியாதைக்குரிய டாக்டர் ஓஸ்வால்ட் கோமிஸ் (Rev. Dr. Oswald Gomis) திகழ்கின்றார். உபவேந்தராக சிரேஸ்ட பேராசிரி யர் சந்திரிகா என். விஜேரத்ன அவர்களும் பதவி வகிக்கின்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பிரதான பிரதிபலிப்பு நிறமாக ஊதா மற்றும் மஞ்சள் என்பன காணப்படுகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பீடங் களையும் உள்ளடக்கிய வகையில் 29 விளை யாட்டு அணிகள் காணப்படுகின்றன. விளையாட் டுச் செயன்முறைகள் இப்பல்கலைக்கழகத்தின் உடற் கூற்றியல் பீடத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு இடை யிலான விளையாட்டுப் போட்டிகளில் இவ்வணி யினர் பங்கேற்கின்றனர். இலங்கையின் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் 4 வருடங்க ளுக்கு ஒரு முறை நடாத்தப்படும் இலங்கைப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் கொழும்புப் பல்கலைக்கழகம் வெற்றியாளராகத் திகழ்கின்றது. 1980 களில் இருந்து 10 சாம்பியன் விளையாட்டுகளில் 8 போட்டிகளில் இப்பல் கலைக்கழகம் வெற்றிகரமாக சாதித்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களினால் 40 கழகங்கள் மற்றும் சங்கங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பீடங்கள் ரீதியான மாணவர் ஒன்றி யங்கள், மத கலாசார கருத்தியல் மற்றும் பண்பு களை வெளிப்படுத்தும் ஒருங்கமைப்புக்கள் மற்றும் பொது நலநோக்கைக் கொண்டு உருவாக் கப்பட்ட அமைப்புகள் என்பன உள்ளடங்கு கின்றன.

கொழும்புப் பல்கலைக்கழகம் கல்விசார் வெளியீடுகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் University of Colombo Review, The Ceylon Journal of Medical Science, Sri Lanka Journal of International Law, International Journal on Advances in ICT for Emerging Regions, Sri Lanka Journal of Bio-Medical information and Sri Lanka Journal of Critical care ஆகிய வெளியீடுகள் வெளியிடப் படுகின் றன. இலங்கையில் காணப்படும் உயர் கல்வி நிறுவனங்களுள் கொழும்புப் பல்கலைக் கழகம் முக்கியமானதாகவும் இப்பல்கலைகழகத் தால் வழங்கப்படும் கல்வி தரம் வாய்ந்ததாக வும் காணப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.

நூற்றாண்டுகளாக கல்வி எனும் மகத்துவ மிக்க சொத்தை வழங்கி வரும் கலை மற்றும் விஞ்ஞா னப் பீடங்கள் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளவிருத்தியில் நேர்கணிய வளர்ச்சியைக் காட்டி வருகின்றது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மிகப் பெரியதும், அதிக மாணாக்கர்களையும் கொண்ட பீடமாக கலை பீடம் காணப்படுகின் றமை குறிப்பிடத்தக்கது.

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளில் கீழ் கல்வி மற்றும் ஆய்வுகளை கலைப் பீடம் மேற்கொண்டு வருகின்றது. 1921 ஆம் ஆண்டு தொடக்கம் கலை ஒரு பாட அலகாக இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி யில் கற்பிக்கப்பட்டு வந்தது. இது 1942 இல் கலைப் பீடமாக மாற்றப்பட்டது. அத்தோடு நின்று விடாது 1963 இல் புதிய கலை பீடமாக இது பரிணமித்தது. கலைபீடத்தின் முதல் பீடாதிபதி யாக பேராசிரியர் ஹேம் ரே (Prof. Hem Chandra Ray) விளங்கினார்.

கலைப் பீடமானது குடிசனவியல், பொருளி யல், புவியியல், ஆங்கிலம், ஆங்கில மொழிகள் கற்பித்தல் துறை, வரலாறு, சர்வதேச உறவுகள்,  சிங்களம், சமூகவியல், அரசியல் விஞ்ஞானமும் பொதுக் கொள்கையும் மற்றும் பௌத்தப் பாலிக் கற்கைகள் ஆகிய துறை களை (Department) கொண்டு செயற்படுகின் றது. இத்துறைகளில் இளமாணி, முதுமாணி, தத்துவவியல், உயர் கல்வி மற்றும் கலாநிதி கற்கை நிகழ்ச்சித் திட்டங்களும் வழங்கப்படு கின்றன. இத்துறைகளோடு சில கற்கைப் பிரிவுகளும், கலைப் பீடத்தில் இயங்கி வரு கின்றன. கணிதம், கணினித் தகவல் தொழில் நுட்பம் (ICT) ஊடகவியல், இஸ்லாமியக் கற்கை போன்ற கற்கைப் பிரிவுகளும் மொழித் திறன் விருத்தி மற்றும் சர்வதேசத் தொடர்புகள் காரணமாக சீனமொழியைக் கற்பிக்கும் கொன்பியூசியஸ் பிரிவும் கலைப் பீடத்தில் இயங்கிவருகின்றன. மேலும் கலைப் பீடத்தில் இயங்கி வரும் துறைகள் மூலம் பெறுமதி மிக்க சான்றிதழ் பயிற்சிநெறிகளும் வழங்கப் பட்டு வருகின்றன. அத்துடன் இளங்கலை மாற்றுத் திறனாளிகளுக்கான (ஊனமுற்ற மாணவர்களுக்கான) மையம், அவர்களுக்குத் தேவையான மற்றும் போதுமான வசதி வாய்ப் புக்களுடன் கற்கைநெறிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் கற்கைப் பிரிவுகள் தனித்துறைகளாக உயர்த்தப்பட்டு சிறப்புக் கற்கை நெறிகளை வழங்குவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலைப் பீடத்தில் வழங்கப்படும் கற்கைநெறி களை தொழில்சார் கற்கைநெறிகளாக்கும் நோக்குடன் சில கற்கைத் துறைகள் மூலம் தொழிற் பயிற்சி நெறியானது ஒரு கற்கை அலகாக வழங்கப்பட்டு வருகின்றது. கலைப் பீடம் வருடாந்தம் துறைசார் கல்வி மாநாடு களையும், அறிவியற் கருத்தரங்குகளையும்; நடாத்தி வருகின்றது. மாணவர்களின் இலக்கி யத் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பீடாதிபதி விருதுகள் (Dean Awards) நிகழ்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கலை, கலாசார திறமைகளை ஊக்கு விக்கும் நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் கலைப்பீடம் மென்மேலும் விருத்திப் பெற்ற வண்ணமே செயற்பட்டு வருகின்றது என்பதில் ஐயமில்லை.