பூமியைக் கடந்து சென்றது பாரிய விண்கல்

118

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாரிய விண்கல்லொன்று பாதுகாப்பாக பூமியைக் கடந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 65717 (1993 BX3) என்று அழைக்கப்படும் இந்த விண்கல்லானது அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட பெரியதாகும் என நியூஸ் வீக் சஞ்சிகை குறிப்பிட்டிருக்கிறது.

அது குறிப்பிட்டுள்ள தரவுகளின்படி, அடுத்த விண்கல் பூமியைக் கடந்து செல்லும் திகதி ஜனவரி 17 அதிகாலை 3:49 மணியாகும் எனத் தெரிவிக்கப்பட்;டுள்ளது.

நியூஸ்வீக் சஞ்சிகையின் கருத்துப்படி பருமன் அடிப்படையில் 1992 இல் அவதானிக்கப்பட்ட 1,345 அடி (சுமார் 410 மீட்டர்) விட்டமுடைய விண்கல் குறிப்பிடத்தகாகும். இந்த மதிப்பீடு சரியாக இருந்தால், அந்த விண்கல்லானது நியூயார்க் நகரில் உள்ள 1,250 அடி உயரமுள்ள “எம்பயர் ஸ்டேட்” கட்டிடத்தை விடவும் சற்று பெரியதாக இருக்கும் என கூறுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, தற்போது பூமிக்கு அருகில் சுமார் 25,000 விண்கற்கள் உள்ளன. அவை எதுவும் எதிர்வரும் நூற்றாண்டில் பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், மற்றொரு பாரிய விண்கல்லொன்று பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (2015 NU13) என பெயரிடப்பட்ட இந்த விண்கல்லின் அளவு 2,230 அடியை ஆகும். இது எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் இரு மடங்கு அளவாகும். இது ஜனவரி 9 அன்று அதிகாலை 4.16 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.5 மில்லியன் மைல்கள் தூரத்தில் மணிக்கு 33700 மைல் வேகத்தில் கடந்து சென்றுள்ளது.