அமெரிக்கத் தலை நகரெங்கும் இராணுவத்தினர்

154

ஐக்கிய அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார்.

நாளைய பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு அமெரிக்கா தலைநகர் முழுவதும் அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

பதவியேற்பு நிகழ்வுக்கு பாதுகாப்பளிப்பதற்காக பெண்டகன் 2750 தேசிய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வுக்கு பாதுகாப்பளிப்பதுடன் வெடிபொருட்கள், அணு மற்றும் ரசாயண ஆயுதங்களை கையாள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாஷிங்கடனில் பதவியேற்பு நிகழ்வுக்கு பாதுகாப்பளிப்பதற்காக சுமார் 21500 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் மீது தாக்குதல் மேற்கொண்டு, ஐவரை கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.