மாகாணசபைத் தேர்தலை நடாத்த ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முடிவு ஒன்றை எட்ட வேண்டும்

93

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஒன்றை எட்ட வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமது ஜனநாயக உரிமையுடன் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.