புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் ட்ரம்ப்

144

இன்றுடன் பதவியை நிறைவு செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய கட்சியொன்றை ஸ்தாபிப்பது குறித்து தனது உதவியாளர்களுடன் ஆராய்ந்துள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் உருவாக்கப் போகும் புதிய கட்சிக்கு தேசியக் கட்சி என அவர் பெயர் சூட்ட விரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றோடு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ட்ரம்ப் இறுதி நாட்களில் குடியரசுக் கட்சியின் பல தலைவர்களுடன் முரண்பாட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

அவர் புதிய கட்சியொன்றை உருவாக்குவாராயின் அது அதிகளவான நேரமும் மூலதனமும் தேவைப்படும் விடயமாக இருக்கிறது. எனினும் அவர் குடியரசுக் கட்சியின் வாக்காளர்களின் பலமான ஆதரவைக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் மூன்றாவது கட்சியொன்றை உருவாக்கும் முயற்சிகள் போதிய ஆதரவின்மையால் இதற்கு முன்பு தோல்வியில் முடிந்திருக்கின்றன.

புதிய கட்சியை உருவாக்கும் எந்த முயற்சிக்கும் குடியரசுக் கட்சி கடுமையான எதிர்ப்பை வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.