வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்

148

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு இன்று வெளியேறினார். இன்றைய தினம் (புதன் கிழமை) அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் புளோரிடாவிலுள்ள தனது வாசஸ்தளத்திற்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

தனது பதவிக்காலம் குறித்து சுருக்கமாக பேசிய ட்ரம்ப் நான்கு வருடங்கள் நீடித்த அருமையான காலம் ஒரு ஆயுள் கௌரவம் என்றார்.

புளோரிடாவிற்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக பேசிய ட்ரம்ப், “பிரியாவிடை சொல்ல விரும்புகிறேன். ஆனால் நீண்ட பிரியாவிடையாக இருக்காது என எதிர்பார்க்கிறேன். புதிதாக சந்திப்போம்” என்றார்.

அவரை ஏற்றிக் கொண்டுவெள்ளை மாளிகையை விட்டு புறப்பட்ட Marine One எனும் ஹெலிகொப்டர் வழமையான பாதையை தவிர்த்து கெபிடல் கட்டிடத்திற்கு நெருக்கமாக வெள்ளை மாளிகை மேலால் வட்டமிட்டு புறப்பட்டு சென்றதாக ஊடகவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.