மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு

93

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக மூவர் அடங்கிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான இக்குழுவில் மூன்று பேர் உள்ளடங்குகின்றனர்.

ஓய்வூப் பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வூ பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரும் இக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இம் மாதம் 20ம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு, குறித்த திகதியிலிருந்து ஆறு மாதத்தில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.