தனது முதலாவது போர்க்கப்பலை துருக்கி வெள்ளோட்டமிடுகிறது

145

துருக்கி சொந்தத் தயாரிப்பிலான தனது முதலாவது போர்க்கப்பலை நாளை சனிக்கிழமை வெள்ளோட்டம் விடுகிறது. இன்தான்பூல் போர்க்கப்பல் என அழைக்கப்படும் இதனை துருக்கிய பாதுகாப்பு தொழிநுட்ப நிறுவனம் (STM) எனப்படும் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடற்போர்களில் மிகுந்த வினைத்திறனுடன் செயற்படும் ஆற்றலுள்ள இந்த போர்க்கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டிருப்பதுடன் பல்வேறு நவீன கருவிகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருக்கிறமை சிறப்பம்சமாகும்.

113 மீற்றர் நீளமும் 14.4 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த போர்க்கப்பலானது சுமார் 3000 தொன் நிறைகொண்டது. இப்போர்க்கப்பலில் ஏவுகணைகளுக்கான ஏவுதளங்களும் உள்ளடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.