மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

26

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும்  இது போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக் கள் அல்லது குழுக்களின் காண்புகள் குறித்து விசாரிக்கவும், அறிக்கை சமர்ப் பிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித் துள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (21) வெளியிடப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஏ.எச்.எம்.டி. நவாஸ் விசாரணை ஆணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

விசாரணை ஆணைக்குழு நியமனத் தின் பின்னணி வர்த்தமானி அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது. 2015 ஒக்டோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேர வையில் நிறைவேற்றப்பட்ட “இலங்கை யில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத் துதல்” தொடர்பான 30/1 தீர்மானத்திற்கும் மற்றும் அதனுடன் இணைந்த 34/1 மற் றும் 40/1 தீர்மானத்திற்கும் இணை அனு சரணை வழங்குவதிலிருந்து இலங்கை விலகுவதாக மனித உரிமைகள் பேரவை யின் 43 வது கூட்டத் தொடரின்போது தெரிவித்துள்ளது.

ஆயினும் கூட, நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு பொறுப்புக் கூறல் மற்றும் மனித வள மேம்பாட்டை அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கை யாகும். தீர்க்கப்பட வேண்டிய ஏனைய பிரச்சினைகளுக்கு ஜனநாயக மற்றும் சட்ட செயல்முறைகளுக்குள் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான வகையில் நிறுவன சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

அரசாங்க கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை அடைவ தில் இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரிக்கி றது.

இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பரிந்துரை கள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் அது குறித்து விசாரணைகளை செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை களை பரிந்துரைப்பதற்காகவே மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.