பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான அழுத்தம்

36

அமைச்சர் சரத் வீரசேகர

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் வேர்கள் நாட்டில் ஒழிக்கப்படும் வரை பயங் கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையிலிருக்க வேண்டும் என அமைச்சர் சரத்வீர சேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப் பட வேண்டுமென மீண்டும் அழுத்தம் தரப்படுகின்றது. அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு நான் உடன்பாடில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட் டுள்ளவர்கள் இருக்கின்றார்கள் எனவும் இதில் மாற்றங்கள் கொண்டு வந்தால் அவர்கள் தொடர்பாகவும் முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பேரவை எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதி முதல் மார்ச் 19ம் திகதி வரை இடம்பெறவுள் ளது. இதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.