21 நாள் குழந்தை பலவந்தமாக எரிக்கப்பட்மைக்கு எதிரான வழக்கினை விசாரணை செய்யும் குழாமிலிருந்து நீதிபதி நவாஸ் விலகல்.

61

21 நாள் குழந்தையொன்று கொரோனா காரணமாக மரணித்ததாகக் கூறி பெற் றோரின் அனுமதியின்றி பலவந்தமாக எரிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை விசாரணை செய்யும் நீதிபதிகள் குழாமிலிருந்து நீதிபதி நவாஸ் அவர்கள் விலகிக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாள் குழந்தையை எரித்தமை ஒரு சர்ச்சைக்குரிய விடமாக மாறியதுடன், குழந்தை கொரோனாவினால் பாதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்துவதற்கான எந்தவிதமான சாட்சிகளுகம் வைத்தியசாலை அதிகாரி களினால் குழந்தையின் பெற்றோரிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வழக்கில் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிகாரிகள்,    சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரதிவாதி களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.