உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்

82

பேராயர் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள நிலையில் அத்தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேரை விடுதலை செய்தமைக்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள தாகக் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் தாக்குதலுடன் தொடர்புபட்டதற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லை எனசட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டமை காரணமாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.