வலிகள் உன்னை செதுக்கும் உளிகள்

83

முஹம்மத் பகீஹுத்தீன்

வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி வந்தது ?
சோதனைக்கு நன்றி சொல்.
கல்லும் முள்ளும் காலணிகளை தரவில்லையா!

இதழோரம் விரியும் புண்ணகை
துயரம் தந்த பரிசு
வேதனைகளுக்கு வாழ்த்துக் கூறு

சாதனைகள் படைக்கும் போது
வேதனைகளை நினைத்துப் பார்
ரத்தக் கண்ணீருக்கு மரியாதை கொடு

கனிதரும் மரங்கள் எப்படி வந்தன?
நிலத்தை கீறிக் கிழிக்காமல் விதை போட முடியாது

பூத்துக் குலுங்கும் போது
பூரிப்பு எங்கிருந்து வந்தது
சேற்றுக் கால்களுக்கு நன்றி கூறு

பிள்ளை பிறந்ததும் ஆனந்தக் கண்ணீர் யார் தந்தது?
மரணத்தின் எல்லைக்குப் போய்
உயிரை வாங்கி வந்த தாய்
பிரசவ வேதனைக்கு நன்றி சொல்

இதயத்தைக் பிழிந்து உதிரத்தை கொட்டும் வலிகள்
நாளைய வெற்றிக்கான குறிகள்

கண்ணில் நீரை வரவழைக்கும்
துயரங்கள்
ஈமானுக்கான பாதை
இன்னும் நீ ஈமான் கொள்ள வில்லையா?

நன்றி ஈமானின் பாதி என்றால்
பொறுமை மறுபாதி

நன்மை செய்து துன்பம் வாங்குவது
ஈமானின் இயல்பு
உனக்கு ஈமான் உண்டா?

யாஸிரின் குடும்பம் பொறுமை காத்தது
சொர்க்கம் பரிசாக கிடைத்தது
பொறுமைக்குத்தான் எப்போதும் பெறுமை

வலிகள் உன்னை செதுக்கும் உளிகள்
உள்ளங்களுக்கு அது நோகும்
உனக்கு பெறுமை உண்டா?
இருந்தால் நீ நன்றியுள்வன்.