பிள்ளை வளர்ப்பு மிகப்பெரும் அமானிதம். குழந்தைகள் அல்லாஹ்வின் அருள்.

87

– பிஸ்தாமி

பிள்ளைப்பாக்கியம் என்பது தெய்வீக அருள். மிகப்பெரும் இறை  அருட்கொடை. அதன் இன் பங்கள் அளவிட முடியாதவை. எல்லோருக்கும் வாய்க்காதவை. அல்லாஹ், தான் நாடியவர் களுக்கு மட்டும் வழங்குகின்ற மிகப்பெரும் அருள். அவை இறைவெகுமதியாக கருதப்பட வேண்டும்.

இந்தப் பாக்கியம் அல்லாஹ் நாடியவர் களுக்கு  அவன் நாடுகின்ற போது  மாத்திரம் வழங்குகின்றான் என்பதையும் நாம் விசுவாசம் கொள்ள வேண்டும். “அவன் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளை அன்பளிப்பாகக் கொடுக் கின்றான். அவன் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை அன்பளிப்பாக வழங்குகின்றான்.அல்லது ஆண் குழந்தைகளையும் பெண் குழந்ø தகளையும் கலந்து அன்பளிப்பாக வழங்குகின் றான். அவன் நாடியவர்களை பிள்ளைப்பாக்கி யம் அற்றவர்களாகவும் ஆக்குகின்றான். அவன் இதற்கான காரணத்தை நன்கு அறிந்தவனாகவும் எதனையும் செய்யும் ஆற்றல் மிக்கவனாகவும் உள்ளான்” (42:49,50)

உண்மையில் குழந்தைகள் அற்ற வீடு பாழ டைந்த வீட்டுக்கு ஒப்பானதாகும். குழந்தை களின் அழுகுரலும் சத்தமும் இல்லாத போது மனதுக்கு பாரமாக இருக்கும். வீடே வெறிச்  சோடிக் காணப்படும். வாழ்வின் அர்த்தத்தில் முக்கால் வாசி தெரியாமலே போகும்.வாழ் வுக்கு அர்த்தம் சேர்ப்பவை குழந்தைகள் தான்.வாழ்வுக்கு இன்பமளிப்பதும் குழந்தைகள் தான். பொதுவாக ஆணும் பெண்ணும் திரு மணம் முடித்து தம்பதிகள் ஆகி  குடும்பமாக வாழ்வது ஒரு குழந்தையை பெற்றெடுக்கத் தான். பெற்றெடுத்த பின்னர் முழு வாழ்வையும் அந்தக் குழந்தையை முறையாக பயிற்றுவித்து வளர்த்து ஆளாக்குவதில் தான் தமது காலம் நேரம் மூச்சு உழைப்பு ஓய்வு அனைத்தையும் அவர்கள் அர்ப்பணிக்கின்றனர்.

பிள்ளைகள் கண்குளிர்ச்சியாகும்.

பிள்ளைகள் கண்களுக்கு இன்பத்தையும் குளிர்ச்சியையும் தருபவை. அமைதியை ஆறு தலை இன்பத்தை தருபவை. இது அல்குர்ஆன் கூறும் உண்மை.

‘செல்வமும் குழந்தைகளும் வாழ்வின் அலங்காரங்களாகும்”(அல்கஹ்ப் 46)

நாம் வளர்த்தெடுக்கும் முறையிலும் முறை மையிலும் தான் அவை எமக்கு அலங்கார மாகவும் கண்குளிர்சியாகவும் அமையும். அவர் களை வளர்ப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் விடுகின்ற தவறுகளும் பிழைகளும் சரிவுகளும் எமக்கு ஆபத்தாக மாறும். மன அழுத்தத்தை விளைவாக கொண்டுவரும். எனவே இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியது பெற்றோரின் கடப்பாடாகும்.

சமூகமும் பிள்ளை வளர்ப்பும்.     

இன்று சமூக மட்டத்தில் பிள்ளை வளர்ப்பு தொடர்பில் அநேகமான கருத்தரங்குகளும் விளிப்புனர்வுகளும் செயற்றிட்டங்களும் ஏட் டிக்குப் போட்டியாக நடைபெறுகின்றன. திரு மணத்துக்கு முன்பிருந்தே இவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. அதே வேகத்தில் குழந்தைகள் வளர்ப்பு விடயத்தில் துஷ்பிரயோகங்களும் உரிமை மீறல்களும் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன. இஸ்லாம் இவை குறித்து மிகுந்த கவனமும் கரிசனையும் அவதானமும் செலுத்தி நிலைமையை சீராக்க வழிகாட்டுகின்றது. அதன் போதனைகள் சமூக மட்டத்தில் உயிரோட்டமுள்ள விளிப்புணர்வை ஏற்படுத்துகின்றதை அவதானிக்க முடியும்.

பிள்ளை வளர்ப்பு என்பது இப்போது மிக வுமே சிக்கல் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது.குழந்தைகளை பெற்றெடுப்பது மிகவும் சுலபம்.ஆனால் வளர்த்து பயிற்றுவித்து ஆளாக்குவதோ இமாலய சாதனை என்றாகிவிட்டது. குழந்தை வளர்ப்பு தொடர்பில் இஸ்லாம் மிகவும் சிறந்த உகந்த வழிகாட்டல்களை நெறிமுறைகளை அல் குர்ஆனில் பல்வேறு கோணங்களில் வழங்கி யுள்ளமை அதன்பால் எமது கவனம் குவிய வேண் டும் என்பதற்காகத்தான்.மூஸா நபியை அவரது  தாயார் மிகுந்த சிரமத்துக்கும் நெருக்குதலுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் முறையாக நேர்த்தி யாக பயிற்றுவித்தது, மர்யம் அலை அவர்கள் ஈஸா நபியை பயிற்றுவித்தது  இதற்கு மிகச் சிறந்த உகந்த எடுத்துக் காட்டுக்களாகும். அவ்வாறே இவை அனைத்தையும் தாண்டி நவீன உலகம் பாராட்டி பேசுகின்ற அளவுக்கு தந்தையாக இரு ந்து லுக்மான் அலை தனது குழந்தையை பொறுப் புடன் வளர்த்து பயிற்றுவித்த அறிவுபூர்வமான ஞானம் நிறைந்த (தீடிண்ஞீணிட் ணீச்ணூஞுணtடிணஞ் ண்தூண்tஞுட்) முறைமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் தொடர்பான உரிமைகள்

இஸ்லாம் மிகச்சிறந்த தனிமனிதர்களை உரு வாக்கி  முறையாக திட்டமிட்ட அடிப்படையில் அமைந்த வேலைத்திட்டம் ஒன்றின்  மூலமாக பலமான குடும்பங்களை உருவாக்க முனைகிறது.குடும்ப உறவை சிதைக்கின்ற அனைத்தையும் அது இல்லாதொழிக்கின்றது. குடும்பக் கட்டமைப் பின் ஆரோக்கியம் தான் சமூகத்தின் ஆரோக் கியத்தை உறுதி செய்யும் என்பதை அது எப் போதும் நம்புகிறது. மிகச்சிறந்த பிள்ளை வளர்ப்பு முறைமைதான் எதிர்காலத்தில் தளம்பலற்ற ஆரோக்கியமான தலைமுறை ஒன்றுக்கு வித்திடு கிறது. உடலும் உள்ளமும் சிந்தனையும் சிதைக்கப் பட்ட,பாழாக்கப்பட்ட,பாதிக்கப்பட்ட தலைமுறை ஒன்று உருவாகுமேயானால் அது சமூக இருப் புக்கே மிகப்பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும்.அது சமூகத்தின்  முன்னோக்கிய பயணத்தை, நகர்வை ஸ்தம்பிதமாக்கிவிடும்.

ஆரோக்கியமான குழந்தை தனது வாழ்வை தீர்மானிக்கின்ற பிரதான இடம் தாயின் கருவறை யாகும்.அங்கிருந்தே அதற்கான சுதந்திர உணர் வையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கிவிடு கிறது.

இஸ்லாம் குழந்தை பிறக்கும் முன்னரே அதற் கான உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கிவிட் டது. அதனை வாழ விடுகிறது.

ஜாஹிலிய காலத்தில் குறிப்பாக பெண் குழந் தைகள் பிறப்பதை மிகவும் கடுமையாக வெறுத்த னர்.அதனை அபசகுணமாக கருதினர். அவ்வாறு பெண் குழந்தைகள் பிறந்ததாக நற்செய்தி கூறப் பட்டால் வெட்கித்தலைகுனிந்து எங்காவது தலை மறைவாகி விடும் அபாயகரமான வழமை நீடித் தது. குழந்தை ஓரளவு வளர்ந்ததும் அதனை ஒரு குழியில் தோண்டி உயிருடன் தள்ளி புதைத்து மூடிவிடும் வழமை சாதரணமாக பரவியிருந்தது.குறைந்த பட்சம் குற்றமாக அல்லது மனித உரிமை மீறலாகக்கூட கருதப்படவே இல்லை. ஆனால் இஸ்லாம் இந்த மோசமான நிலையை வன்மை யாக கண்டித்தது கருவில் தரித்த பிறகு வாழ்கின்ற உரிமையை குழந்தைக்கு  வழங்கியது.

மொத்தத்தில் அதனது உயிருக்கு உத்தரவாதமளித்து அதனை கண்ணியப்படுத்தியது.பிறந்ததும் இரண்டு வருடங்கள் தொடராக தாய்ப்பால் வழங்குமாறு இஸ்லாம் தாய்க்கு கட்டளை விடுக்கிறது.இவை அனைத்தும் பிள்ளையுடனான உறவை பேணுவதற்கு இஸ்லாம் எடுக்கின்ற ஆரம்ப கட்ட பிரயத்தனங்களாகும்.இவை மீறப்படுகின்ற பொழுதுதான் எதிர்காலத்தில் நிலைமை மோசமடைந்து செல்லும்.பெற்றோர் பிள்ளை உறவுகள் சிதையும்.விரிசலடையும்.பெருத்த இடைவெளிகள் தோன்றும்.உணர்வுகள் புறக்கணிக்கப்படும்.உரிமைகள் மறுக்கப்படும்.மேற்கின் கலாசாரங்கள் தலைதூக்கும்.அன்றாடம் கொண்டாடி மகிழ வேண்டியவர்களுக்கு பிரத்தியேக தினங்கள் ஒதுக்கப்பட்டு நிகழ்வாக மாறும்.இது மிகவும் மோசமான வரவேற்கவோ அங்கீகரிக்கவோ முடியாத இழி நிலையாகும்.

பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு

பிள்ளை வளர்ப்பு விடயத்தில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகள் அல்லாஹ்வின் நேரடி அருள் என்பதால் விசேடமான கவனம் செலுத்தி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். பிள்ளை வளர்ப்பு என்பது மிகப்பெரும் முறையான கலையாக பரிணமித்துள் ளது. இன்றைய நவீன யுகத்தில் முன்னரைப் போன்று பெற்றோரும் இல்லை. முன்னரைப் போல பிள்ளைகளும் இல்லை.அன்றிருந்த சூழ லும் இல்லை. சுகங்களும் இல்லை. எல்லாமே மாறி யுள்ளது. இன்றுள்ள பெற்றோரும் வேறு. பிள்ளைகளும் வேறு பிரச்சினைகளும் வேறு.

“நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள். உங் கள் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” (ஹதீஸ்)

குழந்தை வளர்ப்பு தொடர்பில் பிரபல எழுத் தாளரான கலாநிதி அப்துல்லாஹ் நாஸிஹ் உல்வான் அவர்கள் 7 வகையான பொறுப்புக்களை நினைவூட்டுகிறார்.

  1. ஈமானிய தர்பியத் அடிப்படையில் மேற் கொள்ளவேண்டிய பொறுப்புக்கள்.

பிள்ளை வளர்ப்பின்  போது பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விடயம் ஈமான் சார்ந்தது. பிள்ளைகளுக்கு பாலுடன் ஊட்டி வளர்க்க வேண்டிய அம்சம் ஈமானிய அறிவையும் உணர்வையும் வழங்குவதுதான். அல்லாஹ் பற்றி யும் அவன் மீது கொள்ள வேண்டிய அளவு கடந்த அன்பையும் நம்பிக்கையுடன் வழங்கி ஈமானை பலப்படுத்த வேண்டும்.அல்லாஹ்வை அன்பாள னாக காட்டி அவனை நெருங்கவைக்க வேண்டும்.அல்லாஹ் மீது ஆசையை உண்டுபண்ணி வளர்க்க வேண்டும்.ஈமானிய அம்சங்களில் ஈடுபாடு காட் டும் வகையில் வீட்டு சூழல் இருக்க வேண்டும்.அமல்களின் பால் ஆர்வம் காட்டும் வகையில் பெற்றோர் மிகுந்த முன்மாதிரியாக நடக்க வேண் டும். சிறுவயது முதலே ஈமானிய வார்ப்பும் பயி ற்றுவிப்பும் குடும்பத்தில் இடம்பெற வேண்டும்.இது பெற்றோரின் தலையாய பொறுப்பாகும்.

  1. பண்பாடுகள் சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள்.

இன்று வளர்ந்து வருகின்ற புதிய இளம் தலை முறை பண்பாட்டை படிப்படியாக இழந்து வரு கின்றது. வீட்டு சூழலிலும் சமூக சூழலிலும் பண்பாட்டின் அடியாக பயிற்றுவிக்கப்பட்ட பரம் பரை ஒன்றை எதிர்பார்க்குமளவு நிலைமை பரி தாபமாக உள்ளது.

இதனை நிவர்த்திக்க தொட்டில் பழக்கம் முதல் பண்பாடுகளை ஊட்ட வேண்டும். சிறுபராயம் முதல் பேண வேண்டிய எளிமையான பண்பாடு களை இங்கிதங்களை பெற்றோர் வீட்டில் நடை முறைப்படுத்துவதன் மூலமாக பிள்ளைகளுக்கு தாமாகவே பார்த்துணர்ந்து விரும்பி நடைமுறைப் படுத்தும் வகையில்  கற்றுக்கொள்ள வழியமைக்க வேண்டும்.

“நான் பண்பாடுகளை முழுமையாக்கவே அனுப்பப்பட்டுள்ளேன்” எனும் நபி மொழியை வீட்டில் காட்சிப்படுத்தி அதற்கேற்றாற் போல ஒரு அழகான சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண் டும்.

  1. உடலியல் சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள்.

பிள்ளைகளை நோய்கள் தொடராத அளவு திடகாத்திரமாகவும் தெம்புடனும் வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடப்பாடாகும்.ஹலாலான உணவுகளை ஆடைகளை வழங்குவது முதல் உடல் ஆரோக்கியம் ஓய்வு உடற்பயிற்சி போன்றவற்றிலும் தரமான பொருத்தமான விளையாட்டுக்களிலும் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.உடல் சார்ந்த திறன்களை விருத்தி செய்யும் பொழுது போக்குகளில் ஈடுபடுத்த வேண்டும்.வழிகாட்ட வேண்டும்.”பலவீனமான முஃமினை விடவும் பலமான முஃமின் அல்லாஹ்வால் விரும்பப்படுகின்றான்.நலவுகள் கொண்டவனாக இருப்பான்.” எனும் நபி மொழியை பிள்ளைக்கு எப்போதும் சிறந்த பாடமாக கற்பிக்க வேண்டும்.

  1. அறிவார்ந்த சிந்தனை அடிப்படையில் மேற்கொள்ளவேண்டிய பொறுப்புக்கள்.

இஸ்லாம் வாசிப்பை மூலதனமாக கொண்ட மார்க்கம்.வாசிப்பே மனித வாழ்வை இயக்கும் அச்சாணியாக தொழிற்படுகிறது. சிந்திக்க வழி வகுக்கிறது.இயற்கை காட்சிகளை ரசிக்கவும் அதில் மறைந்துள்ள இறை நுட்பத்தை அவனது அபார ஆற்றலை உற்றுநோக்கவும் பிள்ளைக்கு சந்தர்ப்பம் வழங்குவது பெற்றோரின் கடமை யாகும். பிள்ளைகளின் அறிவுதேடலுக்கும் சிந்தனை மேம்பாட்டுக்கும் இடம் தரவேண்டி யதும் பெற்றோரின் காத்திரமான பங்களிப்பும் பொறுப்புமாகும்.

தனது குழந்தை சிந்திக்கும் குழந்தையாக சமூக உணர்வுள்ள குழந்தையாக சமூக விவகாரங்களில் அக்கறை காட்டுகின்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கின்ற குழந்தை யாக பரிணமிக்க பெற்றோர் பூரண ஒத்துழைப் பும் வழிகாட்டலும் வழங்க வேண்டும்.

  1. உளவியல் சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ளவேண்டிய பொறுப்புக்கள்.

பிள்ளை வளர்ப்பில் உளவியல் என்றுமில் லாத அளவு ஊடுருவியுள்ளது.அனைத்தை யுமே உளவியல் கண்ணோட்டத்தில் நோக்கி விளக்கும் அளவு அது வியாபகம் பெற்றுள்ளது.குழந்தை உளவியல் அந்தளவு முக்கியம் பெறு கிறது. பிள்ளைகளை பயிற்றுவிக்கையில் உள வியல் குறித்து பெற்றோராகிய நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எமது சொகுசுக்கும் ஓய்வுக்கும் ஆறுதலுக் கும் பிள்ளைகளை கண்டிக்க முனைவது ஆபத் தானது. பிள்ளைகளை துணிகரமாக வளர்க்க வேண்டும். தைரியமூட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அதட்டி மிரட்டி அதைரியமூட்டி அச்சம்மூட்டி வளர்ப்பது பிள்ளைகள் கோழை களாக வளரவும் சமூகத்தை விட்டும் ஒதுங்கி ஓரமாகி அக்கறையற்று இருக்கவும் வழிவகுக் கும்.

பிள்ளைகளை எப்போதும் உள ரீதியான ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும். தீய துர்க்குணங்கள் குடிகொள்ளாத அளவு கண் ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். உள நல மேம்பாட்டில் கரிசனை காட்ட வேண்டும்.எப்போதும் ஊக்குவிப்பதும் உற்சாகமூட்டி விடுவதும் அவர்கள் துடிப்புடன் வாழ இடம் தரும்.

  1. சமூகவியல் சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ளவேண்டிய பொறுப்புக்கள்.

மனிதன் சமூகப் பிராணி. சமூகத்துடன் எப் போதும் ஒட்டி உறவாடி ஒன்றித்து போக வேண்டும்.சமூக விவகாரங்களில் முனைப் புடன் பங்கெடுக்க வேண்டும். சுயநலமியாக வாழாமல் பொது நலன்களில் அக்கறை கொண்டு வாழும் உள தயார் நிலையை ஊட்ட வேண்டும்.நபியவர்கள் தனது இளமைக் காலத்தில் ஹில்புல் புளூல் எனும் ஒப்பந்தத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டது இங்கு நினைவூட்டத் தக்கது.

சமூக விவகாரங்களில் அக்கறையற்றவர் எம்மை சார்ந்தவரல்ல” எனும் நபி மொழி கூறும் போதனைகளை உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் நினைவூட்டுங்கள். அனர்த்தங்கள் ஏற்படுகையில் உடனுக்குடன் களத்தில் குதித்து தம்மால் முடிந்த உதவிகளை தியாகத்துடனும் மிகுந்த பொறுமையுடனும் செய்வதற்கு பயிற்று வியுங்கள்.

சமூக நலனுக்காக உழைப்பது இழப்பது அனைத்துமே உயர்ந்த குணங்கள் என்பதையும் கற்றுக்கொடுங்கள். காட்டிக்கொடுங்கள்.

  1. பாலியல் சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள்.

பிள்ளைகள் வளர்கின்ற போதே பாலியல்         சார்ந்த அவர்களுக்கு  மிகவும் அவசியமான இன்றியமையாத விடயங்களில் போதிய தெளிவை வழங்குங்கள். ஆண் பெண் வேறுபாடுகள் இயல் புகள் இயலுமைகள் குறித்து முறையாக அறிவூட் டுங்கள்.ஆணினதும் பெண்ணினதும் பொறுப் புக்கள் கடமைகள் வேறுபடுகின்ற இடங்களை தெளிவாக இனங்காட்டிக்கொடுங்கள்.

அடுத்த தரப்பின் உரிமைகள் உணர்வுகள் போன்றவற்றை மதிக்க கற்றுக்கொடுங்கள். சகோத ரர்களாக உதவி ஒத்தாசை புரியும் வகையில் வழிகாட்டுங்கள்.

இறுதியாக….

பிள்ளை வளர்ப்பு என்பது சாதாரண விடயமோ விவகாரமோ அல்ல.அது பொறுப்பான விடயம்.ஆன்மிகம் சார்ந்தது.தார்மீகம் சார்ந்தது. ஆத்மீகம் சார்ந்தது. லௌகீகம் சார்ந்தது.வகை கூறியே ஆக வேண்டும். மறுமையில் நிச்சயம் விசாரிக்கப்படு வோம். பிள்ளை வளர்ப்பில் விடுகின்ற மிகச்சிறிய தவறு சமூகத்தில் மிகப்பெரிய அனர்த்தத்தை இடைவெளியை ஆபத்தை நிச்சயம் உருவாக்கும்.

அல்லாஹ் தந்த அமானிதம் தான் குழந்தைகள் என்பதை உணர்ந்து மகிழ்வோடும் மனதாரவும் பிள்ளைகளை நேசித்து அமானிதம் பேணி முறை யாக வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் ஆளாக்கவும் அல்லாஹ் எமக்கு அருள்புரியட்டுமாக.

ஆமீன்.