இஸ்ரேலுக்குள் கொரோனாவை பரப்பியதாக டுபாய் மீது குற்றச்சாட்டு

91

கொரோனா வைரஸ் டுபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பரவியதாக இஸ்ரேலின் முக்கிய தொற்றுநோயியல் நிபுணர் ஷெரோன் எல்ராய் பிரைஸ் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹ{வின் அலுவலகத்தில் டுபாய் முறையீடு செய்துள்ளது.

இஸ்ரேலிய வைத்தியசாலைப் பணிப்பாளர்களுடனான சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவித்த பிரைஸ், டுபாயுடனான சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருவாரங்களுக்குள்; மரணித்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை அதனுடன் 70 ஆண்டுகளில் மேற்கொண்ட யுத்தங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என குற்றம் சாட்டியிருந்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட எமிரேட்ஸ் உயர் அதிகாரிகள் இக்கூற்றுக்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நெதன்யாஹ{வின் ஆலோசகர் இக்கூற்றுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதுடன், அதிகரித்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கைக்கும் மரணங்களுக்கும் இஸ்ரேல் எமிரேட்ஸை பொருப்புச் சாட்டாது என வலியுறுத்தியுள்ளார்.