இலங்கைவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களால், நான் அச்சமடைந்துள்ளேன்

32

இலங்கைவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களால், நான் அச்சமடைந்துள்ளேன் என ஐ.நா, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கடந்த 27ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுக்க மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வகுத்துள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில் இலங்கை குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்களின் வழக்குகளைத் தொடர்வதன் ஊடாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இலக்கு தடைகளை விதிப்பதன் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என மிச்சேல் பச்லெட் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் உட்பட இலங்கைவின் நிலைமையை ஆணையாளர் அலுவலகத்தின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தவும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான வழிவகுக்கும் என அவர் கேட்டுள்ளார்.

இந்நிலையிலேயே இலங்கை தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட், வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.