எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தகவலை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருப்பார்.
மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வு இருக்கின்ற இந்நிலையில் இவரின் வருகை முக்கியமாகின்றது.
அதேவேலை கடந்த காலங்களில். ஐ,நா.மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.