பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஆதரவு

22

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்திற்து ஆதரவு தெரிவித்து அட்டாளைச்சேனையிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  பிரதேச அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம். நஸீர் தலைமையில்  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனஸா எரிப்புக்கு எதிராகவும், தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக நடைபெறும் அநிதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர்.

போராட்டத்தில் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்..ஏ அன்சில், ஏ.எஸ்.எம் உவைஸ், தமின்ஆப்தின்  உட்பட உலமாக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அட்டாளச்சேனையில் இணைந்து கொண்ட இவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகம் வரை நடைபவணியாக சென்றனர்.