தற்போதுள்ள நாட்டின் நிலைமை யில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கக் கூடாது எனவும், அவ்வாறில்லாமல் ஆட்சியைக் கைப்பற்றினால் அது எதிர்க்கட்சியின ருக்கு பாரிய தீங்காக மாறும் எனவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதள்ள நிலைமையில் எதிர்க் கட்சியினர் ஏதாவதொரு முறையில் ஆட் சியைக் கைப்பற்றினால் இன்னும் 10 வருடங்களுக்கு அதிகாரம் தொடர்பாக நினைத்தும் பாரிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் ஹரீன் பெர் ணான்டோ, மனூச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரை சந்தித்த போது ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.