தொற்றுப் பரவல் வேகம் அதிகரிப்பு தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை

8

நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.ஸி.ஆர் பரிசோதனைகளில் நோயா ளர்கள் கண்டுபிடிக்கப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் ஹரித அலுத்கே தெரி வித்துள்ளார். இது தொடர்பாக சுகா தார அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

கொவிட் காரணமாக இளம் வயதினர் மரணிக்கும் வீதம் கடந்த வாரங்களில் அதிகரித்துக் காணப் பட்டதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்.

‘முதற் தடவையாக பி.ஸி.ஆர் பரி     சோதனைகளில் இனம் காணப்படும் நோயாளர்களின் விகிதம் 7.2 வீதத்தினை அடைந்துள்ளது. சில பிரதேசங்களில் இது 15 முதல் 30 வீதம் வரை காணப் பட்டது. இது புதிய வகையான வைரஸா என்பது தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும்.

தென்னாபிரிக்கா அஸ்ட்ரா ஸெனிகா தடுப்பூசி பயன்படுத்தலை நிறுத்தியுள் ளது. தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக் கப்பட்ட வைரஸ் வகையை அஸ்ட்ரா ஸெனிகா கட்டுப்படுத்துவதில்லை என தெரியவந்துள்ளது. எமது நாட்டிற்கும் இவ்வகை வந்துள்ளதா என்பது தெரிய வில்லை. அதனைத் தெரிந்துகொள்வ தற்கான வசதியும் நம்மிடம் இல்லை. ஜயவர்தனபுர இராசயன கூடத்தில் மாத் திரம் நாடு முழுவதுமுள்ள மாதிரிகளை பரிசோதனை செய்வதன் மூலம் நாட் டின் உண்மையான நிலைமையை அறிந்துகொள்ள முடியாது.’