உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை முழுமையற்றது –

23

சட்டமா அதிபர் திணைக்களம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர் பான அறிக்கை முழுமையற்றது என  வும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக் கையையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு   சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் உள்ள ஆதாரங்கள் மற்றும் ஏணைய ஆவணங் களைப் பாகசிலித்துப் பார்த்தன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் 30 பக்க அறிக்கையொன்றின் மூலம் வழிகாட் டல்களை பொலிஸ் மா அதிபருக்குத் வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பாக சட்டத்தரணி    நிசாரா ஜயரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர் பான சட்ட நடவடிக்கை தாமதமடை யாமல் இருப்பதற்காக மேலே குறிப் பிட்டுள்ள காரணங்களை விரைவாக கருத்திற்கொண்டு 14 நாட்களுக்குள்   அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை யொன்றினை சட்டமா அதிபர் திணைக் களத்திற்கு வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவிக் கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரி வித்தார்.