ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரவுள்ள நாடுகள்

23

இம்மாதம் இறுதியில் ஜெனீவாவில் நிகழவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை  நிலைமைகள் தொடர்பான பிரேரணை கொண்டுவரவுள்ளதாக அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் உறுதிப் படுத்தியுள்ளது.

ஜெனீவாவிற்கான பிரித்தானியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஜுலியன் ப்ரய்ட் வைட் பிரேரணையை முன்வைக்க வுள்ளதாக ஐக்கிய நாடுகள்  சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள் ளது. இதற்கு ஆதர வாக இதுவரை கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்ரோ, வடக்கு மஸடோனியா மற்றும் பிரித்தானியா என்பன உள்ளன.