பிரதமரின் அறிக்கையை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வரவேற்பு

18

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கு வதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந் திருக்கும் செய்தியை அமெரிக்கா வர வேற்பதாக இலங்கைக்கான அமெரிக்  கத் தூதுவர் எலய்னா பீ. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

மரணித்த உடல்களை அடக்கம் செய் வதற்கு சர்வதேச சுகாதார வழிகாட்டல் களை பின்பற்றுவதன் மூலம் சிறுபான் மையினரின் மத உரிமையை உறுதிப் படுத்துவதானது ஆக்கபூர்வமானது செயல் எனவும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

10 திகதி பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப் பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்கள், இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர் னாண்டோ பிள்ளை அவர்கள் நீரினால் கொவிட்-19 வைரஸ் பரவாது என்று கூறியிருந்தமையை சுட்டிக்காட்டி நீரி னால் கொவிட்-19 வைரஸ் பரவாது என்றால் ஏன் முஸ்லிம்களின் ஜனா ஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படக்கூடாது என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். அதற் குப் பதில் தெரிவிக்கும்போதே பிரதமர் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.