கடந்த பாராளுமன்ற கண்காணிப்பு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதன் மூலம் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது

20

தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான ஜனாதிபதியின் உறுதிமொழியும் அடக்கம் செய்வதற்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலான அரசாங்கத் தின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தனது 73வது சுதந்திர தின உரையில் “இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவ தற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். அவ்வாறே எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோவிட் நோய்த்தொற்றினால் மரணிப்பவர் களை அடக்கம் செய்வது தொடர்பாக எழுப் பிய கேள்விக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சபையில் பதிலளிக்கையில், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவோம் என்று அறிவித்திருந்தார். இவை மிகுந்த வரவேற்புக் குரிய விடயங்களாகும்.

எனினும் கடந்த தோல்வியடைந்த பாராளு மன்றத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாது காப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்படும் என ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு உறுதி யளித்துள்ளார். உண்மையில் அந்த அறிக்கையின் 14 விடயங்களில் காணப்படும் 90-% பரிந்துரைகள் ஒரு சிலர் செய்த குற்றத்திற்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் இலக்குவைத்து தண்டிப்பதாகவே அமைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தை தரும் விடயமாகும். அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு போதும் பிரச்சினைகளுக்கான தீர்வை கொண்டு வராது. மாற்றமாக அது  நாட்டில் மேலும் தீவிர வாதத்தை அதிகரிப்பதற்கே வழிவகுக்கலாம்.

உலகளாவிய ஆயுத உற்பத்தி நிறுவனங்க ளுடன் தொடர்புகள் வைத்துக்கொள்வதற்கு முடி யுமான சில விஷம சக்திகள் ஒரு தாய் மக்களாக வாழும் இலங்கையர்களிடையே மேலும் பிரிவு களையும் பிளவுகளையும் ஏற்படுத்தி அவர்களுக் கிடையே மோதல்களை உருவாக்குவதற்கும் கங்கணம் கட்டியிருப்பதாக தோன்றுகிறது.

கடந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கண் காணிப்பு குழுவின் அறிக்கை இறுதி பாராளு மன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுமில்லை, விவா திக்கப்படவுமில்லை. இந்த அறிக்கை குறித்து பரந் தளவிலான கருத்தாடலொன்று பாராளுமன்றத் திற்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ நடை பெறவுமில்லை.  அந்த அறிக்கை கடந்த பாராளு மன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையின் தரத்தை விடவும் குறைவான தெட்டத் தெளிவான பாகு பாடும் பாரபட்சமும் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது.

இந்த அறிக்கையானது உயிர்த்த ஞாயிரு தாக் குதலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் குழுவின் பரிந்துரைகளின் எந்தவொரு பகுதியிலும் அந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு வழிவகுத்த மூல காரணிகள் குறித்து எத்தகைய அறிவார்ந்த அல்லது தர்க்க ரீதியான தொடர்பை யும் காண முடியவில்லை. அந்த அறிக்கை ஆய் வுக்காக உள்வாங்கிய அதன் பதினான்கு பகுதி களிலும் தாக்குதலுடன் சம்பந்தமான திருப்தி கரமான எந்தவொரு காரணத்தையேனும் குறிப் பிடவில்லை. உதாரணமாக, அறிக்கையின் பரிந் துரைகளில் ஒன்றாக அச்சு, இலத்திரணியல் மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவற்றுக்கு என்ன தொடர்பு இருக்கிறது?

பாதுகாப்பு காரணங்களுக்காக முகக்கவசகம் அணிவது தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்படியே தடையும் செய்யப்பட்டது. ஆனால் ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டு தாரிகள் எவரும் முகக் கவசங்களை அணிந் திருக்கவில்லை. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மாதம் கழிவதற்குள் சரியாக 2020  பெப்ர வரி 19 இல் முகக்கவசம் அணிவது நாட்டில் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. நாட் டின் மக்கள் தொகையில் 1% க்கும் குறைவான பெண்கள் நிகாப் மற்றும் அபாயா அணியும் உரிமையை அந்த அறிக்கை மறுத்துவிட்டது. இன்று சுகாதாரப் பணியாளர்கள் முழுமையாக மூகம் மூடிய நிலையில் தமது கடமைகளை செய்வதை இலத்திரணியல் ஊடகங்கள் வழங் கும் செய்திகளினூடாக நாளாந்தம் கண்டு வருகிறோம். ஆனால் யாரும் தேசிய பாது காப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற கோரிக் கையை எழுப்புவதில்லை!

பிழையான பிம்பங்களை பிரமைப்படுத்தும் 14 இறுதி தீர்வுகளின் பட்டியலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்த தொடர்பும் இருப்பதாக அறிய முடியவில்லை. அந்த நீண்ட தீர்வுப் பட்டியலில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து  சட்டங்கள், பள்ளளிவாசல்கள் சட்டம், சர்வதேச பாடசாலைகள் சட்டம், ஹலால் சான்றிதழ் போன்றவற்றை அணுகுவது தொடர்பான விதிகளும் அடங்கும். இந்த நேரத்தில் முஸ்லிம் களின் சோதனைக்குட்படுத்தப்பட்ட நலன்புரி நிறுவனங்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்படுவதற்கு என்ன தொடர்புகள் உள்ளன? உண்மை யில் இந்த அறிக்கை அதனை தயார் செய்தவர்களின் பக்கச்சார்பு மனோ நிலையையே வெளிக்காட்டுகிறது.

கண்காணிப்புக் குழுவின் எடுகோல் களின் படி இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயக் மற்றும் மதபோதகர் ஜைனுல் அப்தீன் ஆகியோர் தீவிர வாதத்தை பரப்புரை செய்பவர்கள் என 25 பெப்ரவரி 2020 அன்று வெளிவந்த பல சிங்கள மற்றும் ஆங்கில அச்சு ஊட கங்கள் முதல் பக்க தலைப்பு செய்தி களாக வெளியிட்டன. பிழையான மதிப்பீட்டின் அடிப்படையில் முத்திரை குத்தப்பட்ட இவர்கள் இருவரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகும் இலங்கைக்கு வருகை தந்து விரிவுரை களை நடத்தினார்கள் என ஊடக அறிக் கையில் வந்த செய்தி முற்றிலும் பொய் யாகும். அவர்கள் இருவரில் எவரும் ஏப்ரல் தாக்குதல்களுக்கு பின்னர் இலங் கைக்கு விஜயம் செய்யவில்லை.

வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்;துவதானது நிச்சய மாக முஸ்லிம்களை தீவிரவாதிகளின் கைகளில் தள்ளும் ஒரு முயற்சியாகவே அமையும். மேலும் இந்த நடவடிக்கை பல சிக்கல்களையும் இன மோதல் களையும் உருவாக்க விரும்புவோருக்கு ஊட்டம் கொடுக்கும் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் வெகுவாக பாதிப்படையும். அந்த பாதிப்பு உடனடியாக ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருக்கும்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர் கள் தனது சுதந்திர தின உரையில் “இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடி மகனுக்கும் சம உரிமை உண்டு என்றும் எங்கள் குடிமக்களை இன அல்லது மத காரணங்களின் அடிப்படையில் பிரிப்ப தற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றும் அழுத்தமாக உறுதியளித்திருந்தார். ஆனால் கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகள் எமது நாட்டு மக்களை பிரிவினையின் பால் இட்டுச் செல்வ தோடு வெளிச்சக்திகளின் கைப்பாவை களாக இயங்கும் தீவிரவாதக் குழுக் களை உருவாக்கும் வகையில் அமைந் துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்படுவ தற்கு அண்மித்த ஒரு காலப்பகுதியில் அவசரமாக இந்த அறிக்கை சென்ற 19 பெப்ரவரி 2020ல் சபையில் சமர் பிக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து ஜனாதிபதி அவர்கள் சரியாக 2020  மார்ச்; 03இல் பாராளுமன்றத்தை கலைத்தார். இந்நிலையில் மேற்படி அறிக்கையை கண்காணிப்பு குழு உறுப் பினர்களுக்குக் கூட பரிசீலிக்கக் கிடைத் ததா என்பதும் சந்தேகமானதாகவே தெரிகிறது.

நாடு பிளவுபடுவதை எதிர்த்து பெரும்பான்மை சமூகத்துடன் முழுமை யாக கூட்டிணைந்து பாடுபாட்ட ஒரே சமூகம் இலங்கை முஸ்லிம்கள் மட் டுமே. இதை நான் ஏற்கனவே குறிப் பிட்டுள்ளேன். இத்தகைய நல்லுறவு களின் பிரதிபலனாகவே அண்மைக் காலம் வரை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் எம் எச் எம் அஷ்ரப் போன்ற தலைவர்களை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண் டார்கள். மேலும் முஸ்லிம்களை அவர் களுக்கு மிக நெருக்கமாகவே வைத்துக் கொண்டார்கள்.

எதிர்வரும் 2021 பெப்ரவரி 22ஆம் திகதி ஐ.நா.வின் மனித உரிமைகள்       சபைக் கூட்டம் ஆரம்பமாகிறது. அதில் சர்வதேச சமூகம் சிறுபான்மைகள் சம் பந்தமான பல பிரச்சினைகளை கருத் தாடல்களுக்காக எடுத்துக் கொள்வ தற்கு தீர்மானித்துள்ளது. கிழக்கில் அண்மையில் நடைபெற்ற தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையும் எதிர் வரும் 2021 பெப்ரவரி 23 அன்று இலங்கை பாராளுமன்;றத்தில் அவர் ஆற்றவுள்ள உரை என்பன முக்கிய மான நிகழ்வுகளாக இருக்கப்போகிறது.  இந்நிலையில் தமிழர்களுக்கும் கிழக்கு முஸ்லிம்களுக்கும் இடையிலான இறுக்கமான கூட்டணியானது ஒன்றி ணைக்கப்பட்ட வடகிழக்கு கவுன்சிலை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசுக்கு பெரும் உதவியாக அமையலாம். முஸ்லிம் சமூகம் எல்லாவகையான தெரிவுகளையும் திறந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலை யுள்ளது. எவ்வாறாயினும், ஒரு சில தீவிரவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் சமூகம் தள்ளப் படுவதை விட்டும் அவர்களை காப் பாற்றும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.

சமூகத்தின் மீதான நெருக்கடியான அவலங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மான கணிசமான பங்கை பெரும் பாலான சமகால முஸ்லிம் அரசியல் வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். முக்கியமான முஸ்லிம் நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட் டுள்ள இந்த அறிக்கையின் செயற் குழுவில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதி களும் இருந்துள்ளனர் என்பது கவனத் திற் கொள்ளப்பட வேண்டிய உண்மை யாகும்.