சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களுக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முடிவெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது

24

– கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப் பினர்களைக் கொண்ட  புதிய குழுவானது, குறித்த தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகளை மேலும் தாமதப்படுத்தும் எனக் கூறி அதற்கு எதிரான பேரணி ஒன்று கடுவாபிடிய தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

பேரணி நடைபெற்ற  இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட கார்டினல் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்த வர்கள் அறிவுத்தரம் வாய்ந்தவர்கள் என்றும் எனவே அவர்களது அறிக் கையை அமுல்படுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதியின் ஆலோசனை தேவைப்படாது என்றார். அத்துடன் நீதித் துறையைச் சேர்ந்தவர்களின் அறிக் கையை ஆராய்வதற்கு     சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அவர்கள்  மேலும் தெரிவித்தார்.