இந்தியாவில் அதிக சக்தி வாய்ந்த புதிய வகையான 240 கொரோனா வைரஸ் வகைகள்

15

புதிய வகையான கொரோனா வைரஸ் வகைகளினால் இந்தியாவில் தடுப்பூசி செயற்திட்டம் பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பதாக இந்திய வைத்தியர் ரன்தீப் குலேரியா அவர்கள் NDTV இற்கு தெரிவித்துள்ளார்.

மகாராஸ்டிர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸானது வேகமாகப் பரவக்கூடியதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை புதிய வகையான 240 வைரஸ்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக கடந்த வாரத்திலிருந்து புதிய கொரோனா கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் மகாரஸ்டிரா  கொவிட் தடுப்புக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் சாசான்க் ஜோசி NDTV இற்கு தெரிவித்துள்ளார்.