வராலற்றுப் புதிர்களைப் புரிந்துகொள்ளல்

26

– விக்டர் ஐவன்

இன்று இலங்கை எதிர்கொள்ளும் சிக்கலான நெருக்கடிக்கும் இலங்கை யின் பண்டைய வரலாற்றுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. இன்றைய இலங்கையர்கள் இன்று சிந்திக்கும் விதத்திற்கு  நாட்டின் உண்மையான வரலாற்றை விட வரலாற்றிற்கு வழங்கப்பட்ட வெவ் வேறு விளக்கங்களே தாக்கம் செலுத்தி யுள்ளது. இவ்விடயத்தையும் கருத்திற் கொண்டு இலங்கையின் வரலாற்றை விமர்சன ரீதியாக மீளாய்வொன்றினை மேற்கொள்வதற்காக நான் விரும்பி னேன், அதற்காக மேற்கொள்ளப்பட்ட கடின  முயற்சியின் பலனாக “இலங்கை: வராலற்றின் தூய்மை“ என்ற தலைப்பில்  ஒரு புத்தகத்தை உருவாக்கியது.

இலங்கையின் ஆரம்ப குடியேற்றம் முதல் பிரித்தானிய ஆட்சியின் இறுதி வரையான நீண்ட காலத்தை உள்ளடக் கிய ஒரு ஆய்வாக இது கருதப்பட முடியும். இது நிகழ்வுகளின் வரிசை அடிப்படையிலான தொகுப்பொன் றல்ல. மாறாக, வரலாற்று நடைபெற் றுள்ள புதிர்களைக் கருத்திற் கொண்டு அந்தப் புதிர்களைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

வராலற்றின் பல புதிர்கள் பற்றிய எனது அவதானிப்புகள் பிரபலமான நம்பிக்கைகளுக்கு முரணானவையாகும். பாரம்பரியப் புத்தகங்கள்  மற்றும் அதிகாரப்பூர்வ வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு  மாற்றமானதாகும்.  இதில் உள்ள எனது அவதானிப்புகள் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சிக்கலான நெருக்கடியைப் புரிந்துகொள்ளவதற்கு உதவியாக இருக்கும் என நான் நம்பு கின்றேன். நான் இங்கு இலங்கையின் வரலாற்றை முன் நவீன காலம் மற்றும் நவீன காலம் என இரண்டாகப் வகைப்படுத்தியுள்ளேன். முன் நவீன காலமாக இலங்கை ஆரம்ப குடியேற் றம் முதல் பிரித்தானியா- இலங்கை யைக் கைப்பற்றும் வரையான நிலப் பிரபத்துவ காலத்தையும்  நவீன கால மாக இலங்கை ஒரு பிரித்தானியாவின் காலனியாக மாறியதன் பின்னரான  காலத்தையும் குறிப்பிட்டுள்ளேன்.

இனக் குழுக்களின் ஆரம்பம்

சிங்களவர்களின் மூதாதையர்களா கக் கருதப்படும் விஜயன் உட்பட அவரது ஆட்கள் தற்செயலாக இந்த தீவுக்கு வந்த இதன் ஆதிக்கத்தை கைப் பற்றிய சந்தர்ப்பத்தில் ஏற்கனவே இங்கு சில குடியேற்றங்கள் காணப் பட்டதாகவும்  அவர்கள் நாகரீகம் உள்ளவர்களாக இருந்ததாகவும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின் றன. தொல்பொருள் அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளனர். ஷிரான் ரணியகலா அவர்கள் அனுராதபுரம் மற்றும் கண்டி பிரதேசங்களில் மேற்கொண்ட  அகழ்வாராய்ச்சிகளின் படி, விஜயனின் வருகைக்கு கி.மு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது கி.மு 8ம் நூற்றாண்டுகளில், பானைகளைப் பயன்படுத்திய மற்றும் நெல் போன்ற தானியங்களை பயி ரிட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான நாகரிகமடைந்த மக்கள் தீவில் வசித்து வந்ததாக கண்டறியப்பட்டுள் ளது. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ள யக்ஷ, நாக மற்றும் தேவ பழங் குடியினர் அக் காலத்தில் இலங்கை யில் வாழ்ந்த பழங்குடி மக்களாக இருக்கலாம்.

விஜயனும் அவரது குழுவும் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, ​​இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மற்ற குழுக்கள் அதற்கு முன்னர்  தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டும். எமக்கு இரும்புத் தொழில்நுட்பம் இந்தியாவி லிருந்தே கிடைத்தது. தென்னிந்தியாவி லிருந்து இலங்கைக்கு வந்த இந்த பண்டைய மக்களிடமிருந்து இரும்பு தொழில்நுட்பம் இலங்கைக்கு வந்திருக்கலாம். அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்படி, முதல் இரும்பைப் பயன் படுத்தும் கலாச்சாரம் கி.மு. 950-800 க்கும் இடையில் இருப்பதை கதிர்வீச்சு அளவீட்டு திகதிகள் இது உறுதிப் படுத்தியுள்ளன.

இலங்கை இந்திய துணைக் கண்டத் தின் தெற்கு முனையிலிருந்து மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை யால்  பிரிக்கப்பட்டுள்ளது. இரு நாடு களுக்கும் இடையிலான தூரம் 20 மைல் ஆகும். ராமா பாலம் அல்லது ஆதாமின் பாலம் என்று கருதப்படும் கடல் பாதையின் குறுக்கே உள்ள கல் பாதை இயற்கையான உருவாக்கம் அல்ல எனவும் அது இந்தியாவைச்  சேர்ந்த மனிதர்களினால் உருவாக்கப் பட்ட பாதையாகும் என்பது நாஸா வின் கருத்தாகும். அந்தக் காலத்தில்  கடல் ஆழம் குறைவாக இருந்திருக்க லாம் மற்றும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேறியவர்கள் கடலுக்கு குறுக்கே நடந்து வருவதற் கும் முடியுமாக இருந்திருக்கும்.

எனவே, யக்ஷ நாக மற்றும் தேவ பழங்குடியினரை தென்னிந்தியாவிலி ருந்து வந்தவர்கள் என்று கருதலாம். வட இந்தியாவில் இருந்து இலங்கை க்கு வந்த விஜயனின் வந்தவர்களின் எண்ணிக்கை இங்கு வாழ்ந்த பழங் குடியினரின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்திருக்கலாம், ஆனால் அவர்களின் கூட்டு சக்தி காரணமாக அவர்கள் வந்த பிறகு இலங்கையில் உள்ள கோத்திரங்களில் ஆதிக்கம் செலுத்தும் கோத்திரமாக அவர்கள் மாறியிருக்கலாம். படிப்படியாக அந்த ஆதிக்கம் செலுத்தும் கோத்திரத்தினரை அடிப்படையாகக் கொண்டு கோத்திரங் களின் உருவாக்கம் மூலம்  சிங்கள சமூகம் உருவாகியிருக்கலாம்.

மதங்கள் தோன்றல்

ராஜ்யத்திற்கு முந்தைய காலப்பகுதி யில் பழங்குடியினருக்கு தலைவர்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரையும் ஒன்றினைத்த ஒரு தேசியத் தலைவர் இருந்திருக்க மாட்டார். அந்த நேரத்தில் தீவின் மக்களுக்கு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த மதமும் இருக்கவில்லை. பௌத்த மதம் இந்த இரண்டு குறை பாடுகளையும் தீர்த்து வைத்தது எனக் கூறலாம். மதம் ஒன்று இல்லாமை காரணமாக மக்களின் மனதில் வெறு மையை பௌத்தம் நீக்கியது எனக் கூறலாம். அதே சமயம், தேசியத் தலைமை இல்லாமல் கோத்திரத் தலைமைகள் மாத்திரம் காணப்பட்ட நாட்டிற்கு பௌத்த மதம் காரணமாக ஒரு அரசன் கிடைத்தது. பௌத்தம் அரசன்  மற்றும் அரச குடும்பத்தின் மதம் என்பதாலும் அது அறிவிற்கு எட்டக்கூடிய ஒரு மதம் என்பதாலும் வேடுவ மக்களைத் தவிர நாட்டு மக்கள் அனைவரும் அந்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். பௌத்தம் சிங்கள இனத்தை உருவாக்கி அனைத்து பழங்குடியினரையும் ஒன்றிணைக்கும் மதமாகவும் செயல்பட்டிருக்கலாம். அதே சமயம், இலங்கை ஒரே மதத்தைப் பின்பற்றும் ஒரே இன மக்களைக் கொண்ட நாடாக மாறியிருக்கலாம். தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்து வருவோரும் பௌத்த மதத்தத்தை ஏற்றுக்கொண்டு  சிங்கள பௌத்தர்களாக மாறியிருக்கலாம். ஒரே மதத்தின் ஒரே இனத்தின் மன்னர்களாக நாட்டின் மன்னர்களும் மாறியிருக்கலாம்.

பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு  புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டதாலும்   அவர்கள்  தங்களது இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ளாததாலும், அதுவரை நடைமுறையில் இருந்த முறையில் மாற்றம் ஏற்பட்டு பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மொழியில் பேசுபவர்கள் மாத்திரம் காணப்பட்ட இலங்கையில்  மேலதிகமாக இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழ் பேசும் இனக் குழுவொன்றும் தோன்றம் பெற்றிருக்கலாம்.  இந்த மாற்றம் ஏற்பட்ட ஆரம்ப நாட்களில் இது மன்னர்களுக்கும் மத குருமார்களுக்கும் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். இந்தப் பிரச்சினையானது சிங்கள பௌத்தரல்லாத அல்லாத எல்லாளன் மன்னர் நீண்ட காலமாக நாட்டை ஆண்டதின் காரணமாக தோன்றியிருக்கலாம்.

இந்த நிலைமை தேவனம்பிய திஸ்ஸ மன்னன் மரணமடைந்து நீண்ட காலம் செல்வதற்கு முன்னரேயே ஏற்பட்டது. இதன் விளைவாக, பழைய அரசர்கள் தீவின் வட பகுதியில் தமது ஆதிக்கத்தை இழந்தனர். பௌத்த தேரர்களுக்கும் அரசர்களுக்கு இருந்த அதே கவலை இருந்ததாகத் தெரிகின்றது. எல்லாளன் பௌத்தத்த மதத்திற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், பௌத்த தேரர்கள் சிங்கள பௌத்த மன்னர்கள் உதவி செய்ததைப் போலவே எல்லாளனிடமிருந்து அவ்வளவு உதவிகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்க மாட்டார்கள். எல்லாளன்  எவ்வளவு நல்ல நீதியான மன்னராக இருந்தாலும், இந்தக் காரணங்களுக் காக அவரது ஆட்சி பௌத்த துறவி களுக்கும் ஒரு பிரச்சினையாக இருந் திருக்கலாம். மகாவம்சம் எல்லாள மன்னரைப் பற்றிக் கூறும்போது தந்தை மகனுக்குக் காட்டும்  அன்பை விட அதிக நீதி உணர்வைக் காட்டிய ஒரு மன்னர் என  வர்ணித்தள்ளது. அத்தகைய ஒரு மன்னரைத் தோற்கடிப் பதற்கான போரை நியாயப்படுத்துவ தற்காக இது பௌத்த மதத்தைக் காப் பாற்றுவதற்கான போர் என பொது மக்களுக்குக் காட்ட வேண்டும் என் பது அந்த இருசாராருக்கும் தெரிந்தி ருந்ததுடன் அந்த துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி அவர்கள் அந்தப் போரிலும் வெற்றியும் அடைந்தனர்.

1ம் விஜயபாகு மற்றும் 2ம் பராக்கிரமபாகு

ஆனால், துட்டகைமுனுவைப் போன்று ஏனைய மன்னர்கள் வெளி நாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான போர்களில் மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தவில்லை. இதற்குக் காரணம், சமூகம் இரண்டு இனம் இரண்டு மதமாக மாறியிருந்த துடன் மன்னர்களும் இரண்டு மதங்கள் மற்றும் இரண்டு இனங்களின் மன்னர்களாக மாறியிருந்தனர்.

துட்டகைமுனுவுக்கு  பின்னர் ஒரு சக்திவாய்ந்த வெளிநாட்டு படை யெடுப்பாளருக்கு எதிராக போராடி நாட்டை ஐக்கியப்படுத்திய மன்னர்  முதலாம் விஜயபாஹு (1055-1100). அவர் எல்லாளர் போன்ற ஒரு மன்ன ருடன் அல்லாமல்,  77 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த  பௌத்த ஆலயங் களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சோழ ஆட்சியாளருக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. ஆனால் விஜயபாஹு மன்னர் அந்தப் போரை ஒரு மதப் போராக மாற்ற வில்லை.

முதலாம் விஜயபாஹு மன்னருக் குப் பிறகு ஆட்சியில் இருந்த ஒரு சக்திவாய்ந்த வெளிநாட்டு படையெடுப்பாளருக்கு எதிரான போர் வெற்றியின் பின்னர் நாட்டை ஒன்றி ணைத்த கடைசி மன்னராக  பராக்ரமா பாஹு II (1236-1278) மன்னர் கருதப் படலாம். இலங்கை மீது படையெடுத்த அனைத்து படையெடுப்பாளர்களிட மும் மிக பயங்கரமான மற்றும் தீவிர பௌத்த எதிர்ப்பு படையெடுப்பாள ராக கருதக்கூடிய கலிங்க மாகனுடன் அவருக்குப் போராட வேண்டியிருந் தது. கலிங்க மாகானுக்கு எதிரான போரை அவர் ஒரு மதப் போராக மாற்றவில்லை. இந்த இரண்டு மன்னர் களைப் போலவே, வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிராக யுத்தமின்றி நாட்டை ஐக்கியப்படுத்திய மீதமுள்ள இரண்டு மன்னர்களும், முதலாம் பராக்கிரமபாகு (1153-1186) மற்றும் மன்னர் ஆறாம் பரக்ரமபாஹு (1415-1467) ஆகியோர் பௌத்தத்தின் முன்னேற்றத்திற்காக பௌத்த ஆலயங் களைக் கட்டிய அதே நேரம் இந்துக்  கோயில்களையும் அவர்கள் கட்டினர். பௌத்த ஆலயங்களுக்காக கிராம நிலங்களை வழங்கியதுபோல் , ​​இந்து கோவில்களுக்காவும் நிலங்கள் வழங் கப்பட்டன. அரிதான விதிவிலக்குகள் இருந்தாலும், துட்டகைமுனவுக்குப் பிறகு இலங்கை மன்னர்கள் கூடுதல் குறைவாகவோ இரண்டு மதங்களைப் பின்பற்றும் மன்னர்களாகவே காணப் பட்டனர். பின்னர் அதுவே மன்னர் களின் பொதுப் பன்பாகவும் மாறியது.

மன்னர்களின் இந்தக் கொள்கைக்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்களின் தோற் றத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. பக்தர்கள் வழிபடும் முறையும் அதற் கேற்ப மாறியது. பௌத்த கோவில் களில் சிவன், விஷ்ணு போன்ற முக்கிய இந்து தெய்வங்களையும், அதனுடன் இணைந்த இந்து தெய்வங் களையும் வணங்குவதற்கான தேவால யங்கள் அமைக்கப்பட்டன. சிங்கள பௌத்தர்கள் பௌத்த  வணக்கங் களை பின்பற்றியதுடன்  இந்து கடவு ளர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும்  பெற்றுக்கொண்டனர். பௌத்த பிக்கு களும் தேவலாயாவுக்குச் சென்று மன்னருக்கு பிரிதி வழங்கியுதுடன், கடவுள்களிடமும் பிரார்த்தனை செய்தனர்.

(தொடரும்)