இஸ்லாமிய விழுமியம் போதிக்கும் மதரஸாக் கல்விமுறை!

20

ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு வாழ் வியல் முறையை கொண்டே நகர்கிறது. கல்வி, கலாச்சாரம், ஆன்மீகம், குடும்பம், சமூக கோட்பாடு என அனைத்தும் அந்த வாழ்வியல் முறையில் அடங்கும். ஒரு சமூகம் புகழப்பட்டாலும், பழிக் கப்பட்டாலும் அந்த சமூகத்தின் வாழ்வியல் முறையும் பேசுபொருளாக கையிலெடுக்கப்படும்.இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களின் வாழ்வு முறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய மதரஸாக்கள் பல பழிச்சொல்லுக்கு ஆளாக்கப் பட்டி ருக்கின்றன.“மதராஸாக்களையும் இஸ்லா மிய தீவிரவாதத்தையும் உறவுபடுத்தி பேசுதல்” என்பது உலக விவாதப்பொருளாக தற்போது உரு வெடுத்திருக்கிறது.

இஸ்லாமிய எதிர்ப்பும் மதரஸாக்களும்

நியூயார்க் 9/11 நிகழ்விற்கு பிறகு, மதரஸாக் களையும் தீவிரவாதத்தையும் இணைத்து பேசுவது உலக பொது விவாதமானது. அதிலும் குறிப்பாக இலங்கையில் 2009 போருக்கு பின்பு பௌத்த தீவிரவாத சக்திகளின் வளர்ச்சியால் இந்த விவாதம் உள்ளூரின் மூலை முடுக்குவரை பரவியது.

இதன் விளைவு, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மதரஸாக்களின் மீது சித்தரிக்கப்பட்ட எதிர்மறை எண்ணம், மக்களின் மனதில் ஆழ வேரூன்றி ஒருவித அச்ச உணர்வை தோற்றுவித்தது. இந்த அச்ச உணர்வு தான் இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது பதற்றமாக பரிணமித்தது. இறுதியில், தாக்குதலின் பின்புலத்திலுள்ள உண்மை குற்ற வாளிகளை குறித்து அறிவார்ந்த ஆய்வு மேற்கொள் வதை விடுத்து, தாக்குதலுக்கு கொஞ்சமும் தொடர் பற்ற விழுமியங்களின் மீது கவனம் திசை திருப்பப் பட்டது.

உண்மை ஆதாரத்தை பற்றி எந்தவொரு அக் கறையும் இல்லாமல், வேண்டுமென்றே தோற்று விக்கப்பட்ட ஒரு அச்ச உணர்வை மட்டுமே கருத் தில் கொண்டு ஆய்வு செய்வது ஒட்டு மொத்த         தேசத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடியும். தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள அதைப் பற்றிய முழுமையான புரிதல் வேண்டும்.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளும், அர சியல்வாதிகளும் தெள்ளத் தெளிவாக இந்த தாக்கு தலை திசைத்திருப்பியுள்ளனர். யாருக்கு தெரியும், இவர்கள்தான் இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்புலமாக செயல்பட்டு, அதற்கு இலங்கையுள்ள மதரஸாக்களை அநியாயமாக காரணமாக்கி, ஒரே சமூகமாக இருந்த மொத்த இலங்கை மக்களையும் அச்சத்தால் இருவேறு துருவங்களாக பிரித்திட எண்ணினர் போலும்.

மதரஸா — – ஒரு விளக்கம்:

அரபு மொழியில் மதரஸா என்ற வார்த்தைக்கு பள்ளிக்கூடம் என்று பெயர். பரம்பரை முஸ்லிம் களால் நிறைந்த பெரும் பாரம்பரியமிக்க மண் தமிழகமும் இலங்கையும் ஆகும். இதில் பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தால் ஆங்கிலமொழி அதிக கவ னம் பெற்றாலும், முஸ்லிம்களின் மதரஸாக்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. முஸ்லிம் மதரஸாக்கள் பல படிநிலைகளை கொண்டது.

15 வயதிற்கு உட்பட்டோருக்கான மதரஸாவில் இஸ்லாத்தின் அடிப்படை கூறுகளும், அரபு மொழி யும், குர்ஆன் ஓதும் முறையும் பயிற்றுவிக்கப்படும். ”மௌலவி மதரஸா” எனப்படும் அரபு கல்லூரி யில் மாணவர்கள் இஸ்லாமிய அறிவியல் பயிற்று விக்கப்பட்டு மார்க்க அறிஞர்களாக உருவாக்கப் படுவர். இது பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் ‘பிர்வீனா கல்வி’ போன்றது.

குர்ஆன் மதரஸா:

இந்த மதரஸா 15 வயதிற்கு உட்பட்டவர்கள் பயி லும் பள்ளிக்கூடம். இங்கு இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களும், குர்ஆன் ஓதும் முறையும், வணக்க வழிபாடுகளும் பயிற்றுவிக்கப்படும். மாணவர்கள் காலையில் பொதுப்பள்ளியிலும் மாலையில் மதரஸா விலும் கல்வி பயில்வார்கள்.இது இலங்கையின் தாஹம் பஸலா கல்விகூடம் போன்று இயங்கக் கூடியது.

ஹிஃப்லுல் குர்ஆன் மதரஸா:

குர்ஆன் மனனம் செய்வதெற்கென்றே செயல்படக் கூடிய ஹிஃப்லுல் மதரஸாவில், அரபி உச்சரிப்பு முறை, குர்ஆன் ஓதுவதற்கான விதிகள் மற்றும் மனனம் செய்யும் வழிமுறைகள் ஆகியவை பயிற்றுவிக் கப்படும்.இங்கு 20 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்ப பகுதி நேரமாக கல்வி கற்க வருவார்கள்.

மௌலவி மதரஸா எனப்படும் அரபு கல்லூரி:

பௌத்த பிட்சுகளுக்கான பிர்வீனா கல்வி போன்று முஸ்லிம்களுக்கான உயர் கல்வியும் இஸ்லாத்தில் வழங்கப்படுகிறது. அந்த உயர் கல்வி பயிலும் இட மாக செயல்படுவதுதான் மௌலவி மதரஸா எனப் படும் அரபு கல்லூரி. நான்கு முதல் ஆறு வருடங்கள் முழுநேரமாக மதரஸாவிலேயே தங்கி பயில வேண் டும். 15 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள் இங்கு கல்வி கற்கலாம். ஆண் பெண் என இருவருக்கும் தனித் தனியாக மதரஸாக்கள் உண்டு. (சில மதரஸாக்களில் பெண்களுக்கான கல்வி காலம் குறைக்கப்பட்டிருக்கும்.)

எட்டாம் வகுப்புவரை படித்தவர்களோ அல்லது இலங்கையின் பொது சான்றிதழ்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களோ மௌலவி மதரஸாவில் உயர்கல்வி பெறலாம். சில மௌலவி மதரஸாக்கள் அனாதை இல்லங்களாகவும் செயல்பட்டுக் கொண்டு வருகின் றன. அவைகள் 6 வயது பூர்த்தியான ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்து இலங்கை யின் பொது சான்றிதழ்கான தேர்விற்கு பயிற்சியும் கூடவே அடிப்படை இஸ்லாமிய கல்வியையும் வழங்குகின்றனர். தேர்வில் வெற்றி பெற்றவுடன் இஸ்லாமிய உயர்கல்வியை வழங்குகின்றனர்.

இந்த மௌலவி மதரஸா என்ற அரபு கல்லூரியில் இஸ்லாமிய உயர்கல்வி பெற்று வெளியே வரும் மாணவர்கள், சமூக சேவகர்களாக, பள்ளிவாசல் இமாம் களாக, இஸ்லாமிய பொது நிகழ்ச்சிகளை வழிநடத் துபவர்களாக தங்களை சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

மதரஸாக்கள் – இட வசதியும், கல்விக் கட்டணமும்:

குர்ஆன் மதரஸா பொருத்தவரை பள்ளிவாசல் களிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடைபெறும். இடவசதி இல்லாத நெருக்கடி யான ஊர்களில், வேறு வழி இல்லாத போது, ஆசி ரியரின் வீட்டிலேயே குர்ஆன் மதரஸாக்கான கல்வி வழங்கப்படும்.அதே போல் ஹிஃப்லுல் குர்ஆன் மதரஸாக்களுக்கும் பெரும்பாலும் பள்ளிவாசல்கள் தான் கல்வி மையமாக செயல்படுகின்றது.

ஆனால் மௌலவி மதரஸாக்களுக்கு விசாலமான இடவசதி தேவை. குறைந்தபட்சம் 50 முதல் 500 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்று கூடவேண்டிய அவசியம் இருக்கிறது.இஸ்லாமிய  மரபு வழிக்கல்வியானது முழுக்க முழுக்க மசூதியுடன் தொடர்புடையது. ஆகவே மௌலவி மதரஸாக் களுக்கும் மசூதி அத்தியாவசியத் தேவையாகும்.

பரம ஏழைவீட்டுப் பிள்ளைகளும், ஆதரவற்ற இளம் சிறார்களுமே இஸ்லாமிய கல்வி பயில வரு வதால், பெருவாரியான மதரஸாக்கள் இலவசக் கல் வியையே வழங்குகின்றன. கல்வி இலவசம் என்பது இஸ்லாமிய ஆட்சியில் இருந்த நடைமுறை ஆகும். சமுதாயத்தில் தயாள குணம் கொண்ட பல தனவந் தர்களின் பங்களிப்பால் பல மதரஸாக்களில் பிள்ளை களுக்கு இஸ்லாமிய கல்வி இலவசமாக வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் காலசூழல் காரணமாக சில மதரஸாக்கள் ஒரு சிறுதொகையினை கல்விக் கட்டணமாக பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.

மதரஸாக்கள் – கல்வித்தரமும், மாணவர்கள் வளர்ச்சியும்:

மௌலவி மதரஸாக்களின் கல்வித் தரம் என்பது மதரஸா நிர்வாகத்தின் நிதி மற்றும் பொருளாதார நிலையைப் பொருத்தது. வலுவான பொருளாதார பின்புலத்தை கொண்ட மதரஸாக்கள், இஸ்லாமிய கல்வியிலும் பொதுக் கல்வியிலும் மாணவர்கள் தழைத்தோங்க வழிவகை செய்கிறார்கள்.

மதரஸா கல்விபெற்ற மாணவர்களில் பலர், பொதுக் கல்வியில் முதுகலை (க.எ.) அல்லது ஆய்வுக் கல்வி (கட.ஈ) வரை படித்து உயர்பதவியில் அமர்ந்தவர் களாகவும், தொழிற்கல்வியின் மூலம் தன்னை மேம் படுத்திக் கொண்டவர்களாகவும் உயர்ந்துள்ளனர்.

அதேசமயம் நிதிநிலையில் வலுவற்ற சில மதரஸா நிர்வாகங்கள் அடிப்படையான விழுமியங்களை கூட வழங்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.

பள்ளிவாசல்களும் மதரஸாக்களும்:

முஸ்லிம்களின் வாழ்வில் ஆன்மீக மேம்பாடு மற்றும் கல்விக்கான மையமாக பள்ளிவாசல்களும் மதரஸாக்களுமே இயங்குகின்றன. இஸ்லாமிய வர லாற்றில் பள்ளிவாசல்களின் ஒரு உட்பிரிவுதான் மதரஸாக்கள் ஆகும்.

முஸ்லிம் சமூகத்தினர் ஒரு நாளைக்கு 5 வேளை பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக ஒன்றுகூட வேண் டியிருக்கிறது.

பௌத்த அல்லது இந்து கோயில்களில் சில முக்கிய சந்தர்ப்பங்களிலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடுகின்றனர்.

ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை பொருத்தமட்டில் ஐவேளைத் தொழுகை, ஜும்மா தொழுகை, ரமலானில் இறுதி பத்து நாட்கள் பள்ளி வாசலிலேயே தங்கியிருத்தல் (இஃதிகாஃப்), ரமலான் மற்றும் ஹஜ் என்ற இருபெருநாள் தொழுகைகள், திருமண நிகழ்ச்சி, ஜனாஸா தொழுகை, மார்க்க தீர்ப்பு வழங்குதல், கல்வி கற்றல் என எண்ணற்ற கார ணங்களுக்காக முஸ்லிம்கள் அதிகமதிகமாக பள்ளி வாசலுக்கு வரவேண்டிய அவசியமிருக்கிறது.

முஸ்லிம்களின் நிலைத்த அமைதியான ஒன்றி ணைந்த சமூக வாழ்க்கை முறைக்கு பள்ளிவாசல்களே பாதையமைக்கும் இடமாகத் திகழ்கிறது.

சமீபத்திய வளர்ச்சி பெற்ற மதரஸாக்களும், நடுநிலை சர்வதேச பள்ளிகளும்:

மதரஸாக்களில் கல்வி பயில சேர்ந்திடும் முஸ் லிம் மாணவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் அதி கரித்துக் காணப்படுகிறது.இது மொத்த முஸ்லிம் சமூகமும் இஸ்லாமியப் படுத்தப்படுகிறதோ அல் லது அரேபியமயமாக்கப்படுகிறதோ என்கின்ற தேவையற்ற அச்சம் பொதுமக்களின் மனதில் எழும்ப ஆரம்பிக்கிறது.

நிதர்சனமான உண்மை என்னவென்றால், பெரு நகரங்களில் வாழும் ஏழை முஸ்லிம் பெற்றோர்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றார்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக அரசு பள்ளியில் தங்கள் பிள்ளை களை சேர்க்க முடியாமல் போகிறது.

விளைவு, பிற பள்ளிகளில் சேர்ப்பதற்கான பந்த யத்தில் பங்குபெறுவதற்கு கூட திராணியற்றுப் போகவே, வேறுவழியின்றி முஸ்லிம் மதரஸாக்க ளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்கின்ற னர். இது பல முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

கொழும்புவில் மட்டுமே கிட்டத்தட்ட 5000 குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் இடம் கிடைப்ப தில்லை என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் கணிசமான முஸ்லிம் குழந்தைகள் நடுநிலை சர்வ தேச பள்ளிகளுக்கோ அல்லது மதரஸாக்களுக்கோ செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படு கின்றனர். இல்லையேல் இப்பிள்ளைகளுக்கு கல்வி வெறும் கனவாக மாறிப்போகிறது.

அதிலும் நடுநிலை சர்வதேச பள்ளிகளில் சேரும் மாணவர்களில் பலபேர் அதீத கட்டணச் சுமையை தாங்க முடியாமல் இடையிலேயே நின்றுவிடுகின் றனர்.

மதரஸா செல்வோரில் பலர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மதரஸாக்களில் சேர வேண்டியுள்ளது.இது தரமற்ற கல்விக்கு இட்டு செல்வதால் இடை யில் நின்றுவிடுகின்றனர். தரமான மதரஸாக்களோ இவர்களுக்கு எட்டாக்கனியாக வெகுதூரத்தில் உள் ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எதுவுமே இந்த சிக்கல்களை கண்டு கொள்ளாததால்,தேசத்தின் உயிர் ஜீவனான இளையோர்களில் பெரும் பகுதி யினர் திறனற்றவர்களாய் மாறிப்போயினர். இது சமூகத்திற்கும் தேசத்திற்கும் அச்சுறுத்தலானது.

இலவச கல்வித்திட்டம் என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், சமத்துவமிக்க தாகவும் இருக்க வேண்டும்.ஆனால் இந்த விஷ யத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.இத் தோல்வி மக்கள் தொகையில் ஒரு பகுதியினருக்கு கல்விக்கான உரிமையை முழுவதுமாக பறித்து விட்டது.இதன் விளைவாக, தேசத்தின் வளர்ச்சிக் கான சமூக கட்டமைப்பு சீர்குலைவிற்கு ஆளாகி யுள்ளது. இச்சீர்குலைவிற்கு அரசாங்கமும் அரசியல் தலைமையுமே முழுப்பொறுப்பாகும்.

சமீபமாக வளர்ச்சி கண்டுள்ள மதரஸாக்களும், நடுநிலை சர்வதேச பள்ளிகளும் உருவாக்கி தந்த மாணவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சாடுவதோ அல்லது முஸ்லிம் சமூகம் இஸ்லாமியப்படுத்தப்படுகிறது என்று கருதுவதோ முழு அறியாமையின் வெளிப் பாடகும்.

இது மக்களின் குடியுரிமையிலும், தேசத்தை கட் டமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய அர சாங்கமும் அரசியல் தலைமையும் தன்பொறுப்பை சரிவர செய்யத் தவறியதன் கோர விளைவேயன்றி வேறில்லை. இத்தவறுதலால், மொத்த சமூகத்தின் ஒரு பகுதியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தேசத்தின் பொருளதார மற்றும் சமூக சம நிலையை வலுவிழக்கச் செய்துள்ளது.

நகரமயமாக்கலும் பெருநகரங்களின் வளர்ச்சியும்:

புதிய நகரங்களை உருவாக்குவதும், ஏற்கனவே உள்ள நகரங்களை பெரு நகரங்களாக வளர்த் தெடுப்பதும் முழு வரவேற்பிற்கு தகுதியான முன் னெடுப்பாகும்.இவ்வளர்ச்சிகளின் மீது அதிக கவ னம் செலுத்தப்பட்டுள்ளது என்று நன்றாகவே தெரி கிறது.எனினும்ஒரு குறிப்பிட்ட மக்களின் சமூக பொருளாதார நிலையின் மீது, கொஞ்சம் கூட அக் கறை செலுத்தப்படவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

வசதிமிக்க பணக்காரர்கள் ஒரு புறம், ஏழை எளிய மக்கள் மறுபுறம் என இரு வேறு கூறுகளாக சமூ கத்தை உடைத்தெறிந்த பெருமை நகரமயமாக்கலை யும் பெருநகரங்களின் வளர்ச்சியையுமே சாரும். இந்நிகழ்வு ஏழை எளியோருக்கு கல்வி கிடைப்பதை வெறும் கானல் நீராய் மாற்றியது. அதே சமயம், பணக்காரர்களும் சில பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

அன்றாடங்காட்சிகளால் தொடமுடியாத தூரத் தில் பணக்காரர்கள் வாழ்விடம் உள்ளது. இதனால் பணக்காரர்கள் வாழும் பகுதிகளை பராமரிப்ப தற்கோ அல்லது அங்கு பணிபுரிவதற்கோ குறைந்த சம்பளத்தில் வேலையாட்கள் கிடைக்காமல் போவது பணக்காரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் பணம் படைத்தோர் பகுதிகளிலேயே முன்னேற்றத்திற்கான அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்கும்.

இது கல்வியோடு சேர்த்து மற்ற மற்ற வாய்ப்புகளுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.புதிய விசலாமான குடியிருப்புகளின் வளர்ச்சியால் கொழும்பு நகரம் நிரம்பி வழிகிறது.அதனால் அந்நகரத்திலுள்ள பிரபலமான பள்ளிகளுக்கு இந்த புதிய குடியிருப்புகளில் இருந்தே அதிகப்படியான விண்ணப்பப் படிவங்களில் வருகின்றன.இதனால் நகரத்தின் மற்ற பகுதிகளில் வாழ்வோரில் பெருவாரியானோருக்கு தரமான கல்வி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் அப்பள்ளிகளால் ஒரு குறிப்பிட்ட குறுகிய நிலப்பரப்பிற்கு மட்டுமே கல்வி வழங்கக்கூடிய இக்கட்டானசூழலும் உருவாகியுள்ளது.

கொழும்புவில் குறைந்த வருவாய் ஈட்டும் மக்களுக்கான குடியிருப்புகளும்அதிகரிப்பதால், மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது.ஆனாலும் கொழும்பு பள்ளிகளின் கல்வி வழங்கும் திறன் குறைந்து கொண்டே வருகிறது.

இலங்கை முஸ்லிம்களில் அதிகப்படியானோர் ஏழ்மையிலும் வறுமையிலும் அனுதினமும் வாடுகின்றனர்.இவர்கள் பிற சமூகத்தினர் போன்று அங்கீகாரம் பெறாதவர்கள்.வறுமைக்கோடு கூட இவர்களது நிலையில் இருந்து பார்த்தால் மிகவும் உயரமாகத்தான் தெரியும்.ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு தேவையான அடிப்படையான சான்றுகள் கூட இல்லாதவர்கள்.அந்த சான்றுகளை பெற்றுத்தர உதவிபுரிவோர் எவரும் இல்லாதவர்கள்.

இவர்களுக்கு கல்வியும் மறுக்கப்பட்டது, கல்வி உரிமையும் பறிக்கப்பட்டது, எந்த உதவியும் கிடைக்காமலும் போனது.எனவேதான்அவர்கள் வேறு வழியின்றி மதரஸாவிற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். எனினும் அவர்கள் மீதேதான் பழிச்சொல்லும் சுமத்தப்பட்டது.இது எவ்வகையில் நியாயம்?

மதரஸாவிற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பு இருக்கிறதென்றால், அதை நிரூபிப்பதற்கான வலுவான அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் அவசியம் அல்லவா?அற்பத்தனமான காரணங்களை முன்னிறுத்தி ஒரு சமூகத்தை மொத்தமுமாக ஓரங்கட்டுவதும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளையும் வாழ்வியல் உரிமைகளையும் வலுக்கட்டாயமாக பறிப்பதும், ஒரு தேசத்தின் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் அழகல்லவே!

மதரஸா தீவிரவாதம் உண்மை பின்னணி என்ன ?

மதரஸா தீவிரவாதம் என்ற வெறுப்பு பிரச்சாரம் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்து தீவிரமாக மீடியாக்கள் பேசத் தொடங்கியது. ஆஃப்கானிஸ்தான் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது சோவியத் ரஷ்யா உடன் போராடி ஆஃப்கானிஸ்தானை மீட்டெடுத்தவர்களுக்கு இடையே பிற்காலத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டன. அதனால் அநியாயமும் அராஜகமும் நிறைந்த பல உள்நாட்டு போர்கள் உண்டாயின. அதுவரை அரசியலில் ஈடுபாடு காட்டிடாத தாலிபான்கள், தன் தேசத்தில் நடைபெறும் அராஜகத்தை வேரறுக்கவும், நாட்டை உறுதிபடுத்தவும், அரசியல் பங்களிப்பிற்கு ஆயத்தமாயினர்.

தாலிபான்கள் செய்தது சரியா?தவறா?என்பது ஒரு தனி விவாதம்.ஆனால் இவர்கள் ஏன் அரசியலுக்குள் நுழைந்தார்கள்? மற்ற தேசத்தின் அரசியலை விட அவர்கள் எவ்வாறு தனித்துவம் காட்டினார்கள் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

சோவியத் ரஷ்யாவின் படையெடுப்பு, ஆஃப்கானிய விடுதலை போராட்டம், மேற்கத்திய நிதியளிக்கப்பட்ட கூலிப்படைகள் ஆகிய வற்றின் வரலாற்று பின்புலங்களே தாலிபான்கள் அரசியலிலும் ஆட்சியிலும் பங்குபெற விழைந்ததன் காரணிகளாகும். இது மதரஸாக்களையும் தீவிரவாதத்தையும் ஒன்றிணைத்து பேசத்தூண்டியது.

நியூயார்க் 9/11 நிகழ்விற்கு பிறகு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப்படைகள் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது படையெடுத்தனர். ஈராக்கில் அதன் இராணுவவீரர்கள் இப்படையெடுப்பை எதிர்கொண்டனர்.ஆனால் ஆஃப்கானிஸ்தானிலோ அந்நாட்டின் மதரஸா (பள்ளி மற்றும் கல்லூரி) மாணவர்களே போராட்டக்களத்தில் நின்றனர். தாலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று பொருள்.

ஆஃப்கானிஸ்தானை தவிர்த்து உலகில் வேறெங்கும் பாரம்பரியமிக்க மதரஸா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களாக அண்மைக் காலத்தில் காணமுடியாது. தன் தேசத்திற்காக தனது கொள்கைக்காக போராடியவர்களைத்தான் தீவிரவாதிகள் என உலகம் முத்திரை குத்தியுள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், உலகெங்கிலும் தீவிரவாத செயலில் ஈடுபடும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் மதசார்பற்ற கல்வி நிலையங்களிலிருந்து வந்தவர்களே என்பது வெளிப்படையாகவே தெரியும்.

நியூயார்க் 9/11 நிகழ்வு மற்றும் இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், இவைகளில் ஈடுபட்டவர்களில் எவரும் மதரஸா கல்வி பயின்றவர்கள் கிடையாது.

ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு பின்பு உலகெங்கிலும் உள்ள மதரஸாக்களே மேற்கத்தியர்களின் தாக்குதலுக்கு இலக்கானது.மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை அதிவேகமாக பரப்பியது. இது சாதாரண மக்களின் மனதில் தொப்பி, தாடி, பட்டான் உடைகள் மற்றும் மதரஸாக்கள் செயல்பாடு குறித்த பயத்தை ஏற்படுத்தியது.

ஆஃப்கானிஸ்தானோ அல்லது வேறெந்த தேசமோ, தான் வாழும் மண்ணின் மீது அந்நியநாட்டினர் படையெடுக்கும் போது அவர்களை எதிர்த்து போரிட வேண்டியது, வலுபெற்ற ஒவ்வொரு குடிமகன் மீதும் கடமை. தான் வாழும் நிலம் பாதிப்பிற்குள்ளாகும் போது, தன மண்ணை நேசிக்கும் மாணவர் கூட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்குமா?அல்லது தன் தேசத்தின் பாதுகாப்பிற்க்காக போராட முன் வரிசையில் நிற்குமா?

ஒரு தேசத்தின் உயிர்நாடி அந்நாட்டின் மாணாக்கர்கள் கையில்தான் உள்ளது. அத்தகைய இளையோர் கூட்டம் நாட்டுப்பற்றின் காரணமாக போரில் ஈடுபட்டால், அவர்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்துவதா?

இஸ்லாமிய வெறுப்பு அரசியலில் திளைத்திருந்த மேற்கத்திய ஊடகங்கள் மதரஸாக்களை தீவிரவாதிகளோடு தொடர்புபடுத்தியதால், தேசத்தின் வலிமைமிக்க பாதுகாவலர்கள் ஒளிகுன்றி ஓரங்கட்டப்பட்டார்கள் என்பது தான் உலகம் அறிய வேண்டிய உண்மை !

பன்முகத்தன்மையை மதிக்கக்கூடிய, மனிதர்களிடையே மாண்பை பெருக்கக்கூடிய, அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைக்கக்கூடிய, தேசத்தை வலுவாக கட்டியமைக்கக்கூடிய திறம்வாய்ந்த திட்டம் இலங்கைக்கு தற்போது காலத்தின் கட்டாயம் ஆகும். பல இனம், பல மதம், பல பொருளாதார நிலைகள் என அனைத்து தரப்பினரையும் அரவணைத்து அங்கீகரித்து இடமளிக்கும் உயர்ந்த சமூகமாக நாம் உருவாகிவர வேண்டும்.

முரண்பாடுகளை நம்மிடையே விதைத்து,அதனை தூண்டிவிட்டு இறுதியில் இலங்கை தேசத்தை அச்சுறுத்தவும் அழிக்கவும் பல அந்நிய சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.அவைகளை எதிர்த்து போராடி தகர்த்தெறியும் வல்லமைமிக்க ஒரு உறுதியான தேசத்தை இலங்கை மக்கள் உருவாக்கிட வேண்டும்.