ஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவும் – எதிர்க்கட்சி

17

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 2 முதல் 5 வரை யான பகுதிகளை விரைவாகப் பெற்றுத் தருமாறு எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல   சபா நாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் இந்த அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவா தத்திற்கு முன்னர் பெற்றுத் தரும்படியும், 5 பகுதிகளைக் கொண்ட அறிக்கையில் அனைத்துப் பகுதிகளும் இல்லாமல் விவாதத்தை மேற்கொள்ள முடியாது எனவும்  மேலும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.