தாய்மையின் உணர்வு போராட்டம்

50

இலங்கையில் தற்போது மக்களின் மனம் ஈர்த்த தாய்மார்கள் தான் இவர்கள்.

வளர்த்த நாய்க்காக கதறியழும் தாய்மை ஒருபுறம்

கதறியழும் பிள்ளையை தாய்மை உணர்வுயின்றி அடிக்கும் பெற்ற தாய் மறுபுறம்

அதை நினைத்து வருந்துவதா? இதை நினைத்து கோபப்படுவதா?

இன்றைய எம் சமூகம் எதனை நோக்கி பயணப்படுகிறது?.
அனைத்து உணர்வுகளையும், உறவுகளையும் பணம் தீர்மானம் செய்கிறதா?
பெற்ற தாய்மை எண்ணத்தையும் பணம் தான் தீர்மானம் செய்கிறதா? என்றுஉங்களின் மனதை கேட்டுப் பாருங்கள்

“இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்” என்ற வள்ளுவம் பலித்ததா??

பிறழ்வு கண்ட கலாசாரமே இதற்கு மூலகாரணம் யாழ்மண்ணின் புனித்ததையும் பெருமையையும் கட்டிக்காத்து நிற்பது கலாச்சாரம் ஒன்று தான்

பிள்ளை “பெறுவதால்” மாத்திரம்
தாயாகிவிட முடியாது.
“நாயாகினும்” அன்புறுவதால் தாயாகிடமுடியும்.

நாய்க்காய் உருகி கண்ணீர்விட்ட தாயிடம் இந்த பிள்ளையை சேர்ப்பித்தால்?

தாய்மையின் வலிமையும் பெருமையும் இன்னும்
சில தமிழச்சிகளால் உறுதிபெறுகிறது.

தேங்காய் புனிதம் தான் உடைத்துப்பார்க்கும் வரை தெரிவதில்லை அழுகியவையும் இருக்குமென்று.

சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் எல்லாவற்றுக்கும் ஏதுவாகின்றன.
தமிழனின் கலாச்சாரம் ஒன்றே இதனை கட்டிக்காக்க வல்லது.

ஆதலால் அன்பு செய்வோம்