ஜனாசா அடக்கத்தில் கலந்துகொள்ள இருவருக்கு அனுமதி

19

கோவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரை உடல்களை அடக்கம் செய்யும் இறுதி நிகழ்வு இடத்திற்கு உறவினர் இருவர் அங்கு செல்ல அனுமதி வளங்குவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசெல குனவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், வைத்தியசாலையில்         அடையாலம் காணப்பட்டதன் பின்னர் தமது மத அனுஷ்டான கிரிகைகள் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும்.

முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதோடு அதற்கான சில விதிமுறைகலும் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு சில வழிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக உடல்களை அடக்கம் செய்ய இரணை தீவு அடையாலம் காணப்பட்டுள்ளது.

மேலும், மரணம் அடைந்தவர் எந்த மாகாணத்திற்குரியவரோ அந்த மாகாணத்தில் பொருத்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுமாரு பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள்  ஏனைய அரச அதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடமாக இரணை தீவு அமைந்துள்ளது.

இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான செலவுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும். இரணை தீவில் இரு இடங்களில் உடல் அடக்கத்திற்கு அடையாலம் காணப்பட்டுள்ளது.

கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த உடல்கள் சவப்பெட்டியில் வைத்து திறக்க முடியாதவாறு சீல் செய்யப்பட்டு குறித்த இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசெல குனவர்த்தன குறிப்பிட்டுள்ளர்.