இஸ்லாமிய ஒளியை நோக்கிய அமெரிக்க ஆளுமையின் பயணம்…

63

வரலாற்றிலிருந்து…

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
ரொபர்ட் க்ரேன்..
✍ முதலில் அவர் பற்றி தெரிந்து கொள்ள…

👉சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம்.
👉பின் சர்வதேச சட்டத்தில் மற்றுமொரு கலாநிதிப் பட்டம்.
👉சர்வதேச சட்டங்களுக்கான ஹாவார்ட் அமைப்பின் தலைவர்.
👉முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் வெளி விவகாரங்களுக்கான ஆலோசகர்.
👉அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணைத் தலைவர்.
👉அமெரிக்காவின் தேர்ச்சி பெற்ற அரசியல் நிபுணர்.
👉அமெரிக்க நாகரீக மையத்தின் நிறுவனர்.
👉ஆறு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஒருமுறை ஜனாதிபதி நிக்சன் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் அது பற்றியதொரு ஆய்வை செய்யுமாறு உளவுத்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
உளவுத்துறையினர் வழங்கிய ஆய்வு மிக நீளமாக இருந்ததால் அதனை தனக்கு சுருக்கமாக முன்வைக்குமாறு தன் ஆலோசகர் ரொபர்ட் க்ரேனுக்கு கட்டளையிட்டார் ஜனாதிபதி நிக்சன்.

அதற்கேற்ப க்ரேனும் குறித்த ஆய்வை வாசித்ததுடன் இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ளும் வகையில் இஸ்லாமிய கருத்தரங்குகள்,விரிவுரைகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டார்.
சில நாட்கள்தான் சென்றிருக்கும் ரொபர்ட் க்ரேன் இஸ்லாத்தினுள் நுழைந்து விட்டார் என்ற செய்தி முழு அமெரிக்காவிலும் பரவியது…
ஆம்… ஜனாதிபதியின் கட்டளைக்கேற்ப இஸ்லாத்தைப் பற்றி ஆராய முற்பட்ட அவர் அதனையே தன் மார்க்கமாக எடுத்துக் கொண்டார்.
தன் பெயரை பாரூக் அப்துல் ஹக் எனவும் மாற்றிக் கொண்டார்.

தான் இஸ்லாத்தைத் தழுவியதற்கான காரணத்தை அவர் இப்படி விபரிக்கின்றார்:
நான் சட்டங்களை படிப்பவன் என்ற வகையில் நான் படித்த சட்டங்கள் அனைத்தையும் இஸ்லாத்தில் மிக நேர்த்தியாகக் கண்டேன்.
நான் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் அவர்களது சட்டங்களில் நீதி என்ற சொல்லை ஒரு தடவையேனும் காணவில்லை.
ஆனால் இஸ்லாம் நீதியின் உச்சம்…

அதனால்தான் இஸ்லாத்தில் நீதியின் சிகரமாக விளங்கும் உமர் ரழியின் சிறப்புப் பெயரான பாரூக்கை தன் பெயராக மாற்றிக் கொண்டார்.

அவர் கூறுகிறார்:
ஒருமுறை நான் சட்டம் சம்பந்தமான கலந்துரையாடலொன்றில் பங்கேற்றிருந்தேன். எம்மோடு யூத மதத்தைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் ஒருவரும் இணைந்திருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் கடுமையாகப் பேச ஆரம்பித்தார். நான் அவரை இடைமறித்து அமெரிக்க அரசியலமைப்பில் வாரிசுரிமைச் சட்டத்தின் அளவு என்னவென்று தெரியுமா? என்று கேட்டேன்.

அதற்கவர்: ” ஆம். அது எட்டு பாகங்களைக் கொண்டது என்றார்.
அதற்கு நான்: பத்து வரிகளையும் தாண்டாத வாரிசுரிமைச் சட்டமொன்றை நான் கொண்டு வந்தால் இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம் என்பதை ஏற்றுக்கொள்வீரா என்று கேட்டேன்.
அதற்கவர்: அது சாத்தியமில்லை.
நான்: அல் குர்ஆனின் வாரிசுரிமைச் சட்டம் பற்றிய மூன்று வசனங்களையும் அவருக்குக் காண்பித்தேன்.

சில நாட்களின் பின் என்னிடம் வருகை தந்தவர்: இவ்வளவு விரிவாக ஒருவரையும் விடாது அனைத்து உறவுகளையும் உள்ளடக்கியதும்…
எவருக்கும் அநியாயம் செய்யாது நீதியான முறையில் சொத்துப் பங்கீட்டை செய்யக் கூடியதுமான சட்டத்தை மனித சக்தியால் உருவாக்கவே முடியாது என்பதை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அந்த யூத அறிஞரும் இஸ்லாத்தைத் தழுவினார்.

கலாநிதி அப்துல் ஹக் பாரூக் (ரொபர்ட் க்ரேன்) இன்னும் உயிருடன் இருக்கின்றார்.
ஒருமுறை அவர் கூறினார்: மேற்கத்தேய நாட்டு முஸ்லிம்கள் சரியாக இஸ்லாத்தை கடைப்பிடித்து அதன் உயர்ந்த போதனைகளின் படி வாழாத வரை மேற்கத்தேயர்கள் இஸ்லாத்தின் உண்மை நிலையை புரிந்து கொள்வது கடினம்”

அவரின் இந்தக் கூற்று உலகின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்…

-A.Akeel Ahamed-
(A/L Batch)
Fathih Institute For Higher Education