விண்ணப்பம் நீடிக்கப்பட்டுள்ளது

32புகையிரத நிலைய அதிபர்
Station Master in Sri Lanka Railway Department

*2020.07.31 அன்று கோரப்பட்ட இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சையானது நாட்டினுள் நிலவும் கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காரணமாக விண்ணப்பிற்கும் இறுதித்திகதி 05.03.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.*

*▪️குறிப்பு:இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.*

புகையிரத நிலையங்களின் ஆள் நிருவாகம் நிதி¸ வாணிப நடவடிக்கை கூட்டிணைப்புச் செயற்பாடு¸ இயக்க நடவடிக்கை¸ பிரவேசப் பத்திரமும் அதன் கணக்கீடுகளும் உள்ளடங்கலாக பலதரப்பட்ட சொரூபங்களையுடைய கடமைகளையும் மேற்பார்வையையும் மேற்கொள்ளும் அதிகாரமிக்க கெத்தான பதவியாகும்


இப்பதவிக்கு தெரிவாகும் ஒருவருக்கு முதலாவது மாதத்திலேயே

சம்பளம் கையில் ( OT உட்பட ) *60000.00* ரூபா விட அதிகமாகவே கிடைக்கும். (இச்சம்பளமானது இதே கல்வித தரத்துடன் முகாமைத்துவ உதவியாளராக ( M.A) தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் சம்பளத்தை விட பல மடங்காகும்)

*இது நிரந்தரமானதும், ஓய்வூதிய உரித்துக்குரிய பதவியாகும்.*

பொதுவான விடயங்களை தவிர்த்து இப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

முதலாவதாக

*▪️O/L 4C ( maths C , Tamil C ) One-Sitting*
இவற்றில் கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் – C ஐ கொண்டிருத்தல் வேண்டும். இப்பெறுபேறுகளை ஒரே அமர்வில் பெற்றிருத்தல் வேண்டும்)

▪️A/L -3S

அத்துடன்,

*▪️உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும்¸ நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருத்தல்வேண்டும், உடன்6/ 6 அளவுள்ள கண்பார்வை யை கொண்டிருத்தல்*

*இப்பதவிக்கான வயதெல்லை 18 முதல் 30 வரை ஆகும்.*


*பரீட்சைக்கான கட்டணம் 600.00 ரூபா ஆகும்.*

*விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 05.03.2021 ஆகும்.*


*பரீட்சையைப் பொறுத்த வரை பின்வரும் வினாத்தாள்களை உள்ளடக்கியுள்ளது.*

*1.நுண்ணறிவு* – தொடர் பயிற்சி மூலம் அதிக புள்ளிகள் பெறலாம்.

*2.மொழித்தேர்ச்சி* – இலக்கணங்கள் , கடிதம் , கட்டுரை , சுருக்கம் , இதர விடயங்களில் தேர்ச்சி பெறுவதன் மூலம் அதிக புள்ளிகள் பெறலாம்.

ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50% சித்தியடைதல் வேண்டும்

*தேர்ந்தெடுக்கும் முறை*
இப்பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்று சித்தி பெறும் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து தராதரங்கள் பரிசீலனை செய்யப்படும். இந்நேர்முகப் பரீட்சையின் போது புள்ளிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.

*தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு புகையிரத பயிற்சி பாடசாலையில் 06 மாத காலம் புகையிரத நிலைய அதிபர் சேவையின் சட்டதிட்டங்களும் தொழில்சார் பயிற்சிகளும் வழங்கப்படும்.*


*இலகுவாக தினமும் படிச்சாலே போதும் இலகுவாக தெரிவாக முடியும்.*

*முயற்சியும் பயிற்சியும் வெற்றி தரும்*

*♦️ஒரு விண்ணப்பம் வாழ்கையே மாற்றும்♦️*