கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இசைக் கருவித் தொழில்!

24

அளுத்கமை , தர்காநகரை சொந்த இடமாகக் கொண்டு சுமார் 30வருடமாக இசைக்கருவிப் பொருள்களை தயாரித்து வருகின்ற இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக கொரோனா காரணமாக தங்களுடைய பாரம்பரிய தொழிலில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளனர்.

காய்த்த மாட்டின் தோலினை மூலப்பொருளாக உபயோகித்து இக் கருவிகளை தயாரித்து வருகின்றனர்.எனினும் கொரோனாவினால் உற்பத்தி தடைப்பட்டு தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் விற்பனையாளர்கள் வருகை தந்து இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற கருவிகளை கொண்டு சென்று விற்பனையை மேற்கொள்கின்றனர்.இருந்தும் ஊர் முடக்கப்பட்டுள்ளதால் விற்பனையாளர்களின் வருகையும் தடைப்பட்டுள்ளது.

மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்ற காய்த்த மாட்டின் தோல்கள் பழுதடைந்து அழுகிப் போயுள்ளதால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை இவ் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இசைக் கருவித் தொழில் என்பது இலங்கையின் பாரம்பரிய தொழிலாகும்.நாட்டுக்கு சிறந்த வருவாயை ஈட்டித்தரும் இவ்வாறான உள்நாட்டு உற்பத்திகளுக்கான அங்கீகாரத்தை வழங்கி அந்த உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துவது உரியவர்களின் பொறுப்பல்ல வா??

எனவே இவர்களுக்கான உரிய கொடுப்பனவை வழங்கி இவ் உற்பத்திகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பை அரசு துரிதமாக கையில் எடுக்க வேண்டும்.