தோல்வியில் இருந்து மீள் எழுங்கள்

28

நாம் அனைவரும் ஏதோ காரண காரியத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம். இதனை நம்புதல் கடினம் எனினும் நிஜம் அதுவே. ,
” நீ பிறந்த போது நீ அழுதாய் உலகம் சிரித்தது நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும் .”
என ராபின் சர்மாவின் வரிகளை ஏந்திய ” யார் அழுவார் நீ உயிர் ” ( when you die )புத்தகத்தில் சில வரிகளை கூறுகின்றேன் .அவற்றை செவிமடுங்கள் அவை உங்கள் வாழ்வை மாற்றும் விதையாக கூட இருக்கலாம்.
# தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிட முட்டாள் தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ்நாள் முட்டாள்.

#நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒன்றை சொல்லித்தர தான் செய்கின்றனர். எனவே எல்லோரிடமும் கருணை செலுத்துங்கள்.

#பணம் உள்ளாவர்கள் மட்டும் பணக்காரர்கள் அல்ல. குறைந்தபட்சம் மூன்று நண்பர்களை கொண்டவர்களே பணக்காரர்கள் .

#உங்களின் எந்த விடயத்தில் திறமை உள்ளதோ அவ் விடயத்தில் அதிக நேரத்தையும், கவனத்தையும் செலுத்துங்கள்.

#அடிக்கடி கவலையடையாதீர்கள். தினமும் மாலையில் 30 நிமிடங்கள் ஒதுக்கி உங்கள் அனைத்து கவலையும் பற்றி சிந்தியுங்கள்.

#அதிகாலையில் எழுந்திருங்கள். வாழ்வில் சாதித்தவர்கள் அனைவருமே விடியற்காலை எழுந்ததவர்கள் தான் ,

#நிறைய புத்தகம் வாசியுங்கள். எங்கு சென்றாலும் புத்தகத்துடன் செல்லுங்கள்.

# தினமும் நல்ல இசையை கேளுங்கள். இசை நம்பிக்கையை தரும்.

#தினமும் நிறைய சிரிக்க பழக்கம் கொள்ளுங்கள் . அப்பழக்கம் ஆரோக்கியத்தையும், நண்பர்களையும் பெற்று தரும்,

#உங்கள் கைபேசி உங்கள் வசதிக்காக மட்டுமே. அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் எடுத்து பேச வேண்டிய அவசியமில்லை

இவ்வாறு உங்களுடைய சோம்பலான நாட்களை முறியடிக்க இவ்விடயங்களை பின்பற்றிடுங்கள்.