நீதி அமைச்சரின் புர்கா தொடர்பான யோசனை – ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள எதிர்ப்பு.

52

பொது இடங்களில் ‘புர்கா’ எனும் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எதிர்ப்பதாக அதன் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் தெரிவித்தார்.

“குறித்த ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ய முயற்சிப்பது சமூகத்தின் உரிமையினை மீறும் செயலாகும்” என அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்கள் முகத்தை மறைக்காததை எதிர்க்கவில்லை. எனினும் சட்டத்தின் ஊடாக நிகாப் அணிவதற்கு தடை விதிப்பது மனித உரிமை மீறலாகும் என அவர் கூறினார்.

அவ்வாறு சட்டத்தின் ஊடாக தடை கொண்டுவரப்படுமாயின் மனித உரிமையின் பார்வையில் இது முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்ததொன்றல்ல என அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி கலந்துரையாடலொன்றை ஏற்படு செய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

தற்போது அனைவரும் முகக்கவம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினால் இந்த தடை தொடர்பான விடயத்தினை முஸ்லிம் சமூத்தினால் இதுவரை உணரப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா உள்ளிட்ட முகத்தினை மூடும் ஆடைகளை பொது இடங்களில் அணிவதை தடை செய்யும் வகையிலான முன்மொழிவொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம் – த மொர்னிங் ஆங்கில பத்திரிகை