கிரண் பொலார்டின் அதிரடி ஆட்டம்

58
  1. No

இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு கிரிக்கெட் முதல் நாள் போட்டியில்  டாஸ் வென்ற மேற்கு இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய இலங்கையை அழைத்தது.  முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 131 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 132 என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி  அகில தனஞ்சய  பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளை சரமாறியாக இழந்தது .

தொடர்ந்து களமிறங்கிய  எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அகிலாவால் பந்துகளில் ஆட்டம் இழந்தனர். அத்தோடு இன்றைய போட்டியில் வனிடு ஹசரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கிடையில், அகிலாவின் மூன்றாவது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கிரண் பொல்லார்ட் ஆறு சிக்சர்களை அடித்து குவித்தார்.

11 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த பொல்லார்ட், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.