மக்கள் வசிக்காத பகுதியிலேயே கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய தீர்மானம்

16

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம திகதி வெளியாகியிருந்தது. அதன் பின்னர் சடலங்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

எனினும் இரணைதீவில் கொவிட்19 தொற்று சடலங்களை அடக்கம் செயவதற்கு எதிராக அந்த பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.