ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையை நிராகரிக்கிறோம்- அமைச்சர் சரத் வீரசேகர

17

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் ஒருபோதும் தலையிடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட சகலவற்றிற்கும் அரசிடம் தீர்வு இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கை என்பது முற்று முழுதாக பொய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும். எனவே இந்த அறிக்கையை நாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்நிலையில் எமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் மீதான வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும் கூட எமது உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடுவது என்பது எந்தவிதமான அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.