இந்திய ஊடகங்கள் வைத்தியபீட மாணவியின் இரகசியத் தன்மையை காப்பாற்றியது. ஆனால் இலங்கை ஊடகங்கள்…

32

முன்னாள் பா.உ. ஹிருனிகா

கடந்த வாரம் கொலை செய்யப்பட்டு பெட்டியில் அடைத்து கொண்டு செல் லப்பட்ட பெண் தொடர்பான செய் தியை எந்தவிதமான ஊடக விழுமியங் களையும் பேணாத வகையிலேயே இலங்கை ஊடகங்கள் செய்திகளை வழங்கியது என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் வைத்தியபீட மாணவியொ ருரை பலர் இணைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலைசெய்த சந்தர்ப்பத் தில் குறிப்பிட்ட செய்தியை அந்தப் பெண்ணின் அடையாளத்தை மறைத்தே இந்திய ஊடகங்கள் செய்திகளை வழங் கியது. குறிப்பாக அந்த மாணவியின் உண்மையான பெயரைக்கூட குறிப் பிடாமல் ‘நிர்பயா’ என்ற புணைப் பெயரையை இந்திய ஊடகங்கள் பயன் படுத்தியது. தற்போது வரை கூட இணையத்தில் கூட அந்த மாணவியின் புகைப்படம் ஒன்றினை எம்மால் பார்க்க முடியாது.

ஆனால் இலங்கையில் கொலைசெய் யப்பட்ட பெண்ணின் தலையில்லாத புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த பெண்ணின் குடும்பத்தினர் நிலை எவ்வாறு இருக்கும் என்று நாம் சிறிது சிந்தனை செய்து பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.