சுமார் 20 வருடங்களின் பின் பாடசாலை பாட திட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்.

158

பாட திட்டங்களை புதுப்பிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாடவிதானங்களில் சுமார் 20 வருடங்கள் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை

தற்போதுள்ள பாடவிதானங்களின் உள்ளடக்கம் நாட்டின் பொருளாதார தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களுடன் பொருத்தமுடையதாக இல்லையெனவும், புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பல்கலைக்கழக பாடநெறிகள் நவீன தொழில் சந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைக்கப்படவில்லை. தகவல் தொழில்நுட்பம், கணனி தொழில்நுட்பம் என்பன பாடவிதானங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.